Monday, October 29, 2007

கலக்கற BCCI! புது ஆளு, புது நீக்கம், அதே காரணம்!

டிசம்பர் 2005







இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக கங்குலி க்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை கங்குலியை நீக்க வேண்டும்,
கங்குலி நீக்கப்பட்டார்.






ஜனவரி 2007


இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக சேவாகிற்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை சேவாக்கை நீக்க வேண்டும்,
சேவாக் நீக்கப்பட்டார். கங்குலி சேர்ப்பு



அக்டோபர் 2007









இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக திராவிடுக்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை திராவிட்டை நீக்க வேண்டும்.

திராவிட் நீக்கப்பட்டார். சேவாக் சேர்ப்பு





2008

யார்?

Wednesday, October 24, 2007

தெருக்களை சுத்தம் செய்ய சீன டெக்னிக்


சீனாவின் ஹெபேய் மாகணத்திலுள்ள கிங்ஹுவாங்க்டோ நகரில் ஒரு ட்ரைசைக்கிள் மற்றும் ஒரு டஜன் துடைப்பங்களைக்கொண்டு தெருக்களை சுத்தம் செய்யும் வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மோட்டரில் இணைக்கப்பட்ட துடைப்பக்கள் இடப்புரமாகவும் வலப்புரமாகவும் சுழலச்செய்து தெருக்களில் உள்ள குப்பைகளை ஓரமாக குவிக்கிறது. பின்னர் ஓரமாக குவிந்த குப்பைகளை வேறொரு இயந்திரம் மூலமாக அள்ளுகிறார்கள்.


நன்றி Ananova, Daily Times.

Saturday, October 06, 2007

Dragons den

பிபிசி 2 தொலைக்காட்சியில் வந்த ஒரு ரியாலிடி நிகழ்ச்சி.



ஐந்து தொழில் முதளீட்டாளர்கள் தான் ட்ராகன்ஸ். இவர்களிடம் தொழில் முனைவோர் வந்து தாங்கள் கண்டுபிடித்த சாதனத்தைப்பற்றியோ நடைதி வரும் தொழிலைப்பற்றியோ கூறி, அதனை விரிவாக்கவும் , பொருட்களை
சந்தைப்படுத்தவும் உதவி கேடபார்கள். ட்ராகன்ஸ் தரும் பணத்திற்கு பதிலாக பிசினஸில் பங்குகளை தருவார்கள்.



ட்ராகன்கள் இவற்றை ஆய்வுசெய்த்து கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, நல்ல முதலீடாகப்பட்டால் பணத்தை போடுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து பலர் வெறும் கையுடன் தான் திரும்பினார்கள். நல்ல கண்டுபிடிப்புகளைக்கொண்டு வருபவர்களை வெகுவாகப்பாராட்டி , சந்தைப்படுத்க்டும் முறைகளை சொல்லிக்கொடுத்து முதலீடும் செய்தார்கள்.

நல்ல நிகழ்ச்சி. நம்மூரிலும் இப்படி எதாவது செய்யலாம். நிகழ்ச்சியைப் பற்றி படிக்கவும் பார்க்கவும்.

Friday, October 05, 2007

இரண்டு சர்வாதிகாரங்களின் கதை.

பாகிஸ்தான், பர்மா என்று இந்தியாவின் இரண்டு அண்டைநாட்டுச் சர்வாதிகாரங்கள் இப்போது சிக்கலில் இருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு திக்கில் பயணிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு (மறுபடியும்) நாடுகடத்தப்பட்ட போது பெரும் கொந்தளிப்பி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .

கடந்த ஐந்து ஆண்டுளாக (முன்னாள் சிட்டிபாங்க் அதிகாரி) பிரதமர் சவுகத் அஜீஸ் தலைமையில் நடக்கும் பொருளாதார சீர்திருத்தமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம்.

மதவெறி அமைப்புக்கள் பலமாக இருந்தாலும், இன்றைய பாகிஸ்தானி மிடில் க்ளாஸ்களிடம் மேற்கத்திய மோகமே அதிகமாக உள்ளது. லாகூர் கல்லூரிப் பெண்கள் அணியும் உடைகளிலேயே இதைக்காணலாம். பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கம் தற்போது அரசியலில் கவனம் செலுத்தாமல் ஜப்பான் தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தியா போன்று இன்னொரு ஆசிய புலியாக உருவாகத்தான் நினைக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செய்தி தொலைகாட்சிகளின் தயவால் வெளிப்படையான அரசியல் வவாதங்கள் நடக்கின்றன. தலைமை நீதிபதி பதவிநீக்க விவகாரத்தை அடுத்து நீதிமன்றங்களும் தன்னிச்சையாக இயங்குகின்றன.

இதுவே பர்மாவில், ஆங்க் சான் சூ கீ போன்றொரின் செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன , ஒரு செய்தி கூட வெளியிடப்படுவதீலை. கண்டிப்பாக ராணுவத்தை மீறி நீதிமன்றங்களால் செயல்பட முடியாது.

இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சியின் கிழிருந்தாலும் (பாகிஸ்தானில் விட்டு விட்டும், பர்மாவில் தொடர்ந்தும்) பாகிஸ்தானிய ஆட்சி ஓரளவுக்கு திருந்துவது போல் தெரிவதற்க்கு காரணம் உலக நாடுகள் இன்று வரை பாகிஸ்தானை புறக்கணிக்காமல் அரவணைத்து செல்ல முயன்றது தான். ஆனால் பர்மாவின் மீதோ தொடர்சியாக பொருளாதார தடை விதித்து பர்மா நாட்டையே தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்போது பர்மா அரசு யாரையும் மதிப்பதில்லை. உலக மீடியா சொல்வதையும் கண்டுகொள்வதில்லை.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு அரவணைப்பினால் பாகிஸ்தானிய ஆட்சியில் ராணுவந்தின் பிடி நழுவுகிறது.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு புறக்கணிப்பினால் பர்மீய ஆட்சியில் ராணுவந்தின் பிடி இறுகுகிறது.

Daily Times என்னும் பாகிஸ்தானிய நாளிதழில், சிங்கை பொருளாதார பேராசிரியர் கிஷோர் (அட இவரும் கிஷோர் தான்) மக்பூபானியின் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் வாசிக்க.