Sunday, January 30, 2011

எகிப்து - அடுத்தது என்ன?

துனிசியாவில் கொளுத்திப்போட்டது இப்பொழுது எகிப்தில் வேட்டு வைகக்கும் அளவுக்கு வந்துள்ளது. ஆடுத்து எகிப்தில் என்னென்ன நடக்கலாம் என்று ஒரு சிறு பார்வை.


1. திக்கித்தடுமாறி முபாரக் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால் விரக்தி அடைந்த ஒரு சிறு குழு தீவிரவாத கிளர்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. இருக்கும் பிரச்னை போததென்று ஒரு புதிய தலைவலி மத்திய கிழக்கில் ஏற்படும்.

2. ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எல் பரடேய் போன்ற மிதவாத மேற்கு சார்புடைய லிபரல் அரசு அமையலம்.

3. அல்லது மதவாதிகளிடம் ஆட்சி போகலம். இதையே சக்காக வைத்து இஸ்ரேல் தன் எல்லைகளை பலப்படுத்தும். காசா பகுதியை முற்றிலும் சுற்றி வளைக்கலாம்.

மேற்சொன்ன 2 அல்லது 3 நடந்த்தால் யேமென், லிபியா, அல்ஜீரியா, சிரிய அரசுகள் அடுத்தடுத்து கவிழும்.


இப்பொழுது பீதியைக் கிளப்பும் சில சூழ்நிலைகளை காண்போம்.

1. தற்போது வரை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்தில் பிளவு வரலாம். மக்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சில தளபதிகள் நாட்டில் சில பகுதிகளை தன் வசப் படுத்தலாம். இதன் காரணமாக குழு மோதல் உருவாகி உள்நாட்டுப் போராக மாறலாம். கெய்ரோ நகரை கூறுபோட்டு மாறி மாறி சண்டை நடக்கும். காபுல் (1990-95) , மோகாடிஷு (1993- இன்றுவரை) போன்று கெய்ரோவும் மாறலாம்.

2. ஸ்திரத்தன்மை அற்ற ஒரு அரசு உருவாகி விரைவிலேயே கவிழ்ந்து உள்நாட்டுப் போர் மூளலாம். அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு படை திரட்டி நாட்டை வசப் படுத்த கடுமையாக மோதிக் கொள்ளும்.