Sunday, November 05, 2017

மின்சிக்கனம் தரும் துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (BLDC Fans)

கடந்த சில வருடங்களாக, ஒளிதரும் குண்டு பல்புகள்,குழல் விளக்குகளை ஓரங்கட்டி குறைந்த அளவே மின்சாரம் தேவைப்படும் எல்ஈடி  விளக்குகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆது போலவே வீட்டு உபயாக மின் சாதனங்களில் அனைவராலும் அதிகமாக பயன் படுத்தப்படும் மின்விசிறிகளிலும் மின் சிக்கனம் தரும் வகையில் அறிமுகமாகியுள்ளது  துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (Brushless DC Fans)

இவ்வகை மோட்டார்கள் புதியதன்று பண்டையகால(!) ஃப்ளாப்பி டிஸ்க் படிக்கும் கருவியின் மோட்டார் இந்த வகையை சார்ந்ததே எனினும் சந்தயில் பயன் படுத்தக்கூடிய மின்விசிறியாக இந்த மோட்டர் சில ஆண்டுகளாகவே கிடைக்கிறது

ஒரு சாதாரண மின்விசிறிக்கு சுமார் 80W மின்சாரம் தேவை, ஆனால் BLDC மின்விசிறிக்கு 28W மின்சாரமே தேவை

ஒரு நாளில் சராசரியாக 12 மணிநேரம் ஓடும் சாதாரண மின்விசிறியால் ஆண்டுக்கு 350 யூனிட் மின்சாரம் செலவாகும், அதுவே BLDC மின்விசிறி 120 யூனிட் மின்சாரமே எடுத்துகொள்ளூம் என்பதால், யூனிட் ஒன்றிற்கு 6 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1400 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.


மோட்டார் 12V நேர் மின்னோட்டட்தில் ஓடுவதால் சில மாற்றங்கள் செய்து சூரிய சக்தி தகடுகளுடன் (Solar panel) நேரடியாக இணைக்கலாம். இல்லாவிடில் சாதாரண 230V AC இணைப்பிலும் ஓடும்.

அமேசான்,ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் 3000 ரூபாய் விலையிலிருந்து சாதாரண உள்ளூர் பிராண்ட் தயாரிப்பு கிடைக்கிறது



Surya,Havells போன்ற ப்ராண்ட் நிறுவனங்கள் 5000 ரூபாய் அளவில் விற்கின்றன. ஃபேன் 8 முதல் 10 ஆண்டுகள் வரும் ஐட்டம் என்பதால்  சேமிப்பை கணக்கிட்டால் அமவுண்ட் ஓகே தான்.