Tuesday, January 16, 2007

பெரிய திருமொழி - தமிழாக்கம் (?!)

பெரிய திருமொழி உரையும் தமிழாக்கமும் என்ற நூலின் தலைப்பில் சொற்குற்றம் ஒன்றும் இல்லை. ஒரே ஒரு விஷயம் தான் இடிக்கிறது, திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியை தமிழில் தான் இயற்றியுள்ளார். மேற்படி நூல் 30வது சென்னை புத்தக கண்காட்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஸ்டாலில் உள்ளது. அட்டையை பார்த்தால் ஏதோ தீஸீஸ் போல இருந்தது.

என்னத்த தமிழாராய்ச்சிப் பண்ணி என்னத்த...


வழக்கம் போல இந்த ஆண்டும் எந்த புத்தகம் வாங்காமல், வெறுங்கை வீசுபவர்களை நிரம்பக்காணமுடிந்தது. டெக்னிகல் புத்தகங்களை விற்கும் நிலையங்களில் கூட்டம் அலைமோதிற்று. வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதென் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தக கண்காட்ச்சியைப்பற்றி என் நண்பன் தீபக் எழுதியத்தை படிக்கவும்.

Wednesday, January 10, 2007

உபி தேர்தல் முன்னோட்டம்

அஜீத் சிங் , அகில இந்திய ஆயாராம் காயாராம் அரசியலில் ஒரு முக்கிய புள்ளி, அந்தர் பல்டி அடித்து கூட்டணி மாறுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
தற்போது உபி தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் தன் கூட்டணி வாய்ப்புகளை திறந்து வைக்க முலாயாம் அமைச்சரவைலிருந்து தன் கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பு விலையை அதிகரிக்கக்கோரி ராஜினாமா என்று கிச்சு கிச்சு மூட்டியுள்ளார்.
மறைந்த சரண் சிங்கின் மகன் என்ற ஒரே தகுதியுடன் இவர் அரசியல் நடத்துகிறார். வி பி சிங்க்கின் ஜனதா தளம் தொடங்கி, சந்திர சேகர் , நரசிம்ம ராவ், தேவ கவுடா, என்று பல மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்து பதவி பெற்றார்.
பின்பு மாயாவதி , முலாயம் ஆகியோரிடம் மாறி மாறி தன் கட்சியை அடகு வைத்து அமைச்சர் பதவியை பெற்றார். இந்த தேர்தலில் முலாயம் தேருவது கடினம் என்று பரவலாக நம்பப்படுவதால் கூட்டணியிலிருந்து கழண்டுகொள்ள முதல் படியாக கரும்பு விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார். வாழ்க.