Friday, September 28, 2007

பர்மாவை அனைவரும் கும்மக் காரணம் என்ன?

புத்தபிட்சுக்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மியன்மர் நாடு (பர்மா) உலக மீடியாவிற்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு பர்மீய இராணுவ ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இப்படி அனைவரும் பர்மாவை கும்மு கும்மு என்று கும்மக் காரணம்?

அது ஒன்று மட்டும் தான் சர்வாதிகார நாடா? இல்லையே.

உலகிலுள்ள சர்வாதிகார நாடுகளின் பட்டியலைப் போடுங்கள். அவற்றில் பெரும்பான்மையானவை ஆப்பிரிக்க நாடுகள்.

இவர்களை எதிர்த்தால் நிறவெறியன் என்ற பட்டம் வந்து சேரும்.

மீதம் இருக்கும் சர்வாதிகார நாடுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் நாடுகள். எந்த முற்போக்குவாதியாவது முஸ்லிம் நாடுகளை எதிர்ப்பானா?.

இவற்றை தள்ளிப் பார்த்தால் ஆறு கம்யூனிச சர்வாதிகார நாடுகள் இருக்கின்றன. அவையும் முற்போக்குவாதிகள் எதிர்க்கத்தக்கவை அல்ல.

எஞ்சி நிற்பது பர்மா மட்டுமே. அதனால்தான் அனைவரும் வெளுத்து வாங்குகிறர்கள்.

On Myanmar we can be both democratic and politically correct. Hurray!!

Tuesday, September 11, 2007

இராம்பாக்கம் மஹாஸம்ப்ரோக்ஷணம்



அடியேனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் இராம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில் மஹாஸம்ப்ரோக்ஷணம் வரும் ஞாயிறு (16.09.2007) அன்று காலை 8:10 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹாதேசிகன் ஸ்வாமி முன்னிலையில் நடக்க இருக்கிறது.



இந்த வைபவத்திற்கு முன்னதாகவே வந்திருந்து எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரராகும்படி அனைவரையும் ப்ரார்த்திக்கிறேன்.






Monday, September 10, 2007

செயலிழந்துவிட்ட பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகானத்தை ஒட்டிய , பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் வஜீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சில ஆண்டுகளாக தலிபான்களிடம் திக்குமுக்காடுவதை கண்டுவருகிறோம்.

கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி கிட்டத்தட்ட பாகிஸ்தான் ராணுவம் செயலிழந்து விட்டதை காட்டுகிறது. இருநூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தான் விரர்கள் (அரசு 150 என்கிறது, பழங்குடிகள் 300 என்கிறார்கள்) வெறும் பத்து தாலிபான் ஆதரவு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்கள்.
எந்த தாக்குதலும் இன்றி, பாகிஸ்தான் ராணுவம் ஒரு தற்காப்பு முயற்சி கூட எடுக்காமல், ஒரு துப்பாக்கி குண்டு கூட செலவாகாதவகையில், எதிர்ப்பே இன்றி சரணடைந்துள்ளார்கள். இதில் ஒரு துணை கர்னலும் அடக்கம். ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு இன்று 254 பேர் விடுவிகிக்கப்பட்டுளனர். (அப்போ கவர்மென்ட் சொன்னது தப்பு)

ஏன் இப்படி unprofessionalஆக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு படுகிற காரணங்கள்.

1. அரசியலில் வெகு ஆழமாக ஈடுபட்டு சண்டை போடும் திறமையை இழந்துவிட்டார்கள்.
2. கடந்த எட்டாண்டுகளாக பாகிஸ்தானின் பல்வேறு PSUக்களுக்கு இராணுவ அதிகாரிகள் தான் சேர்மன், எம்டி, எல்லாம், இரெயில்வே உட்பட. இப்படி சொகுசாக இருப்பவர்களை சண்டைபோடச் சொன்னால்.
3. அல்கொய்தா/தாலிபான் ஆட்கள் ராணுவத்துக்குள் முழுமையாக ஊடுருவிவிட்டார்கள்.

என்ன இருந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்பு இப்படி பலவீனப்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

Tuesday, September 04, 2007

அணுசக்தி ஒப்பந்தம்-சீனா-Mitrokihn-

Mitrokihn Archives என்னும் புத்தகம் வெளிவந்தபோது நாடு சில நாட்கள் அல்லோலகல்லோலப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். சில நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல அந்த விஷயமும் அமுங்கிப்போனது. அந்த நாளைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு KGB தாராளமாக 'உதவி' செய்ததையும் அதற்கு தக்க வகையில் அவர்கள் தேசதுரோக கைம்மாறு செய்த்தாகவும் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது.


இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை இன்று இடதுசாரிகள் தீவிரமாக எதிர்க்கிறார்கள், இன்னும் சில பல ஆண்டுகளில் சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் (ஒருவேளை) மிட்ரோகின் போல யாராவது புத்தகம் எழுதப்புறப்படலாம். ஆகவே எதிர்ப்பவர்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இடதுசாரிகள் அத்வானியை போல் எதிர்பது போல் எதிர்த்து ஆதரிப்பது போல் ஆதரித்துவிடலாம். :-)

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை நான் ஆதரிக்கிறேன். காரணம்.

1. சீன அரசின் People's Daily அன்றாடம் இந்த ஒப்பந்தத்தை கரித்துக்கொட்டுகிறது
2. எங்களுக்கும் இது போன்ற ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று முஷாரப் தினமும் கேட்பது

முஷாரப் பற்றி எழுதும் போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. இந்த ஒப்பந்ததின் ஆரம்பகட்டத்தில் அவர் பாகிஸ்தானுக்கும் இது போன்ற ஒப்பந்ததை கோரி ஒரு மாற்று வழியையும் முன்வைத்தார்.

அதாவது அமெரிக்காவே தன்னுடைய ஆட்களை வைத்து அணுவுலைகளை நிர்மாணிக்கவேண்டும். அவர்களே மின்னுர்பத்தி செய்ய வேண்டும், மின்சாரத்தை மட்டும் பாகிஸ்தான் அரசுக்கு விற்க வேண்டும். இதுதான் முஷாரப் முன்வைத்த திட்டம்.

இந்திய அமெரிக்க பேச்சுவார்தையின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிக்கல் இல்லாத யோசனையாகவே படுகிறது.

இருக்கும் அணுவுலைகளை பிரிப்பது, யுரேனியம், எரிபொருள் மறுசுழற்சி, வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வு, NSG நாடுகளை தாஜா செய்வது, IAEA வின் சிறப்பு ப்ரோடொகோல்கள் என்று எந்தச் சிக்கலும் இருக்காது. We could have thought about it or did we?