Tuesday, February 19, 2008

முல்லாக்களின் தோல்வி

பாகிஸ்தான் தேர்தலில் முஷராப்பின் ஆசிப்பெற்ற அளும்கட்சி மட்டுமல்லாது முல்லாகளின் கூட்டணியான முத்தாஹிதா மஜ்லீஸ் ஈ அமல் (எம்எம்ஏ) வும் படுதோல்வி அடைந்துள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த மவுலான ஃபஜ்லுர் ரகுமான் தோல்வி அடைந்துளார். சென்ற தேர்தலில் எம்எம்ஏ மூன்றாம் இடத்தில் தான் வந்தது.

பேனசிரின் கட்சி முதலிடத்திலும் முஷராப்பின் ஆசிபெற்ற PML(Q) இரண்டமிடத்திலும் வந்தன. அனாலும் பேனசிரின் கச்சியை உடைத்து PML(Q) வை ஆளும்கட்சியக்கினார்.
எதிர்கட்சி தலைவர் பதவியையும் எம்எம்ஏவுக்கு தந்தார். அதில் ஒரு ராஜ தந்திரம் உள்ளது.

முஷராப் அமெரிக்காவிடம் சென்று 'பார் எதிர்க்கட்சி வரிசையில் ஒரு முல்லா உட்க்கார்ந்து இருக்கிறான் , என் நான் ஆட்சி இழந்தால் அவன் தான் பதவிக்கு வருவான்' என்று பூச்சாண்டி காட்ட எம்எம்ஏ அவருக்கு உதவியது. அனால் இந்த தேர்தலில் ஆளும் PML(Q) வைவிட அதிகமாக உதை வாங்கியது எம்எம்ஏ தான்.
NWFP யின் மாநில ஆட்சியும் அவர்கள் வசம் இருந்தது அங்கு இப்போது வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

முழு விவரம்

Friday, February 15, 2008

நீர்மூழ்கி கார்


சுவிட்ஸர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனம் ஸ்க்யூபா என்ற நீர்முழ்கி காரை அடுத்த மாதம் ஜெனீவாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பத்து மீட்டர் அழம் வரை நீந்திச்செல்லக் கூடிய திறனுள்ளது. முற்றிலும் லிதியம் பேட்டரிகளால் இயக்கப்படும் இந்தக் வண்டி எந்த மாசையும் வெளியே உமிழாது.

Tuesday, February 05, 2008

ISBயின் வெற்றியும் அரசின் தோல்வியும்

லண்டன் ஃபைனன்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தர வரிசையில் உலகின் முதல் 20 இடங்களுக்குள் இந்தியன் ஸ்கூல் அஃப் பிசினஸின் MBA டிகிரி இடம்பெற்றுள்ளது. நல்ல செய்தி என்றலும் தில் ஒரு நகை முரண் உள்ளது. என்னவென்றல், ISB யின் MBA டிகிரி AICTE ஒப்புதலை இதுவரை பெறவில்லை.

சட்ட ரீதியாக பார்க்கையில் நாட்டில் செயல்படும் பல டுபாக்கூர் கல்வி நிறுவனங்களும் ISBயும் ஒன்றுதான். ISBயோ எங்களுக்கு AICTE/UGCயின் முத்திரை தேவையில்லை என்று கூறுகிறது.

இது எவ்வாறு சாத்தியமானது?

NIIT, இதற்கு அதிக அறிமுகம் தேவையில்லை, எப்படி எந்த அரசு சான்றிதழும் பெறாமல் தரமான கல்வி அளிக்கிறதோ அப்படித்தான். தொடர்ந்து நற்பெயரை தக்க வைத்துக்கொண்டாதே NIITக்கு போதுமானதாக இருந்தது.

ISB கெல்லாக், வர்ட்டன் மற்றும் லண்டன் மேலாண்மை கல்விச்சாலைகளுடனான ஒப்பந்தங்கள் மற்றும் முதல்தர ஆசிரியர்களின் உதவியால் AICTE யுடன் இணையாமலேயெ நல்ல கல்வியை அளிக்க முடிகிறது. இப்போது மேலாண்மை கல்விச்சாலைகளின் சர்வதேச சங்கமான AACSBயுடன் சேர முயற்சிக்கிறது.

படத்திட்டம்,கட்டணம், சேர்க்கை, போதனை, ஹாஸ்டல் உணவு, செல்போன் கொண்டுவரலாமா, என்று எல்லாவற்றையும் அரசு தான் கட்டுபடுத்த வெண்டும் என்று குதிப்பவர்கள் ISB மற்றும் , தேசிய ஹோட்டல் தொழில் கூட்டமைப்பு நடத்தும் ஹோட்டல் மேலாண்மை கல்வித்திட்டதியும் (இதற்கும் 'அரசு அனுமதி' கிடையாது) பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் தலையங்கம்

Thursday, January 03, 2008

முஷாரப்,பிலாவல்,பக்னர்

வழக்கமாக NDTV , CNN IBN போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விவாதங்களையும் SMS மூலமாக நடைபெறும் ஓட்டெடுப்புக்களையும் நான் பொருட்படுத்துவதில்லை.

இவற்றால் எந்த ஒரு பெரிய பலனும் வந்துவிடாது என்பதால் மட்டுமல்ல, இவற்றில் பங்குபெருவோர் எதையும் செய்யமல் பெரிதாக சாதித்து விட்டதைப்போல் எண்ணுவதாலும் கூட.

நேற்று NDTV ல் ஓட்டெடுப்புக்கான கேள்வியை தற்செயலாக் பார்க்க நேர்ந்தது.

முஷாரப் இப்போது பதவி விலக வேண்டுமா? என்பதே கேள்வி.

இது நம்மைப் பொருத்த வரை தேவையில்லாதது மட்டுமல்ல் ஒரு சொசெசூ முயற்சியும் கூட.

பாகிஸ்தானின் அதிபர் பதவியில் தொடரவேண்டுமா என்கிற கேள்வியை இந்திய நேயர்களிடம் ஒரு தொலைக்காட்சி முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதே போல் ஒரு பாகிஸ்தான் டிவி மன்மோகனை சிங்கைப்பற்றி கருத்துக் கணிப்பு நடத்தினால் நாம் ஏற்றுக்கொள்வோமா.

பாகிஸ்தானின் நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொண்டு ராஜாங்க ரீதியாக நடவடிக்கை எடுப்பது வேறு, இதுபோல் வெளிப்படையாக மூக்கை நுழைப்பது வேறு.
-----

குடும்ப அரசியலின் பரிணம வளர்ச்சியாக இப்போது 19 வயது பிலாவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக வந்துள்ளது சோகத்திலும் ஒரு காமெடி. பிலாவல் புட்டோ ஜர்தாரி, ஜுல்பிகார் அலி புட்டோவை நேரில் கண்டது கூட இல்லை.

ஜியா உல் ஹக் இறந்த போது ஒரு வயது இருக்கும்.

'ஜின்னாவுடனும், ஜுல்பிகார் அலி புட்டோவுடனும் அரசியல் செய்த நான் இப்போது யார் யாருடனோ அரசியல் செய்ய வேண்டியுள்ளதே' என்று கிழ போல்டு யாரும் சொல்லாமல் இருக்க பிலாவலுக்கு என் வாழ்த்துக்கள்.


-----

ஸ்டீவ் பக்னர் இந்த முறையும் சொதப்பியதாக தெரிகிறது. நான் சிறு பிள்ளையாய் இருந்த காலத்திலிருந்து அவர் அம்பயராக இருக்கிறர். சீக்கிரம் ரிடையர் ஆவது நலம்.

---
முஷாரப்,பிலாவல்,பக்னர் இவங்கள வெச்சு இன்னிக்கு மசாலவை அரச்சாச்சு (எவ்வளவு நாள் தான் மொக்கைப்பதிவுனு சொல்லறது, பதிவுலகம் அடுத்த கட்டத்துக்கு போக வாணாவா?)

Friday, December 28, 2007

பேனசிர் கொலை, ஏன்?

25/01/2004

அணு ஆயுத கள்ளச்சந்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார் அப்துல் காதர் கான்.

கானுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் முஷாரப்.

அணு ஆயுத கள்ளச்சந்தையைப் பற்றி அமெரிக்க அப்துல் காதர் கானிடல் விசாரிக்கத் தடை விதித்தார் முஷராப்

2007
அமெரிக்காவின் உந்துதலில், தேர்தலை நடத்தவும், பேனசிரை நாட்டுக்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டார் முஷாரப்.

26/9/2007
வெற்றி பெற்றால் அப்துல் காதர் கானை IAEA விடம் ஒப்படைப்பேன் - பேனசிர்

27/12/2007 பேனசிர் படுகொலை


இதுதான் காரணம் என்று இல்லை, ஆனால் இன்னும் பல வருடங்களுக்கு இது போன்ற பல conspiracy theories உலா வரும்.