Wednesday, February 07, 2007

சவுதாம்டனில் பிடித்த ஏழரை

வேலைக்காக வெளிநாட்டுப்பயணம் இந்த முரை ஐக்கிய ராஜ்ஜியத்தின் சவுதாம்டன் நகர். இந்தியாவிலிருந்து லன்டன் வரை ஜெட் ஏர்வேஸில் சொகுசு பயணம். லன்டனிலிருந்து டாக்ஸி.

சவுதாம்டன் வந்ததும் பிடித்தது சனி.
ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துவிட்டு வாடகைக்கு முன்பணம் கொடுக்க கம்பனி மறந்தால் அந்தப்பணத்தை நான் கட்டினேன். சமயம் பார்த்து கார்பரேட் கார்ட் மக்கர் செய்தது ஏடிஎம்மில் காசு எடுக்க முடியவில்லை, என் தனிப்பட்ட வங்கி கணக்கின் டெபிட் கார்ட் வேலை செய்ததால் பிழைத்தேன்.

அடுத்த நாள் கம்பனி நிர்வாகத்தை ஒரு பிடி பிடித்தபின் நிலைமை சீரடைந்தது. அடுத்த நாள் இந்தியாவிலிருந்து வரும் இன்னொரு நாபரிடம் பணம் தருவதாக சொன்னார்கள். அவர் பணத்தை பெட்டியில் வைத்து Check in செய்துவிட்டார். பெட்டியோ லன்டனில் கைக்கு வரவில்லை. அவருக்கும் சேர்த்து வடகையை செலுத்த வேண்டிய நிலைமை வந்தது. ஒருவழியாக 36 மணி நேரத்திற்க்குப்பின் பெட்டி கைக்கு வந்தது. கார்பரேட் கார்டும் வேலை செய்தது. சுபம்.

அலுவல் ரீதியாக குறைந்த காலத்திற்கு வெளிநாடு செல்பவர்கள் கம்பனி தரும் அந்நிய செலாவணி தவிர கொஞ்சமாவது சொந்தமாக அந்நிய செலாவணியைத் (கரன்ஸியாக) வாங்கிக்கொள்ளவும் . எங்கும் அலையவேண்டியது இல்லை. ஏர்போட்டிலேயே கிடைக்கும்.
சொந்தப்பெயரில் சர்வதேச கிரெடிட் (அதிக அளவு லிமிட்டுடன்) மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச்செல்லவும்.ஹோட்டல் வாடகை மற்றும் டாக்ஸிக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும். இல்லை அதற்க்கும் சேர்த்து அட்வான்ஸ் வாங்கவும். குறிப்பாக பணத்தை பெட்டியில் வைக்காதீர்கள். கொஞ்சம் லோ டெக் காக தெரிந்தாலும் பணத்தை கரன்ஸியாகவோ, ட்ராவல்லெர்ஸ் செக்காகவோ எடுத்துச்செல்லவும். ஏனென்றால் ட்ராவல் கார்ட் போன்ற அஃறிணைப்பொருட்கள் சமயம் பார்த்து கழுத்தறுக்ககூடியவை என்பதை அனுபவதில் கண்டேன்.

2 comments:

Nirek said...

Nalla irukuda un payana anubhavam. I am taking those words. I am going to china this weekend for short biz trip. It will help me for sure!

hv fun there. keep posting abt ur travel experiences!

பத்மகிஷோர் said...

புது ப்ளகருக்கு மாறியபின் போட்ட முதல் பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது பழைய பதிவுகளும் சேர்ந்துவிட்டது. நெடு நாட்களுக்கு பிறகு பதிவு போட்டதால் வந்த வினை.

கருத்துக்கு நன்றி நிரேக். சீனா ஆங்கிலம் அதிகம் தெரியாத நாடு என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும்