Tuesday, February 27, 2007

டிஜிட்டல் கேமராவும் டூரிஸ்டுகளும்

டிஸ்கி 1- இந்த பதிவு படமெடுப்பத்தை நல்ல பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்களையோ, அல்லது படமெடுப்பதில் ஆத்ம த்ருப்தி அடைபவர்களையோ கருத்திற்கொண்டு இடப்பட்டதல்ல.

டிஸ்கி 2- தலைப்பு தமிழில் இல்லாததால் இந்த பதிவிற்கு வரிவிலக்கு கிடையாது


குழுவாக சுற்றுலாசெல்லும் போது கண்ணால் காண்பதையெல்லாம் கேமெராவில் சுடும் அன்பர்களே,

நீங்கள் வைத்திருப்பதோ டிஜிட்டல் கேமரா, படம் எடுப்பதோ கட்டடத்தை, யாராவது ஒருவர் படமெடுத்தால் போதுமே ! பிறகு படங்களை மின்மடல் மூலமாகவோ ஃபோட்டோ ஷேரிங் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளலாமே!

அவ்வளவு ஏன், வரலாற்று முக்கியத்துவம் அல்லது முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் ஏற்கனவே அனேக முறை படமேடுத்தாயிற்று, பல படங்கள் இணையத்தில் இருக்கும், ஓசியில் கிடைக்கும், கூகிளாண்டவரின் அருளுடன் அவற்றைப்பெறலாம்.

ஆகவே கட்டங்களையோ மரம் செடி கொடிகளையோ படம் எடுப்பது வேஸ்ட்!

அதனினும் வேஸ்ட் பலபேர் டிஜிட்டல் கேமராவில் அவற்றை படமெடுப்பது.

படமெடுப்பது வேஸ்டெனில் கேமரா எதற்கு? நம் கையில் கேமரா இருப்பது மனிதர்களை படமெடுக்கவே, உடன் வரும் நண்பர்களையும் அன்பர்களையும் படமெடுத்தாலே போதும் என்பது இந்தச்சிறியோனின் அபிப்பிராயம்

நம்மை நிறைய படமெடுத்துக்கொள்வதிலும் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள் உண்டு, குறிப்பாக மென்படங்களை எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனபதாலும் , அதனை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யலாம் என்பதாலும் சற்று கவனம் தேவை.

பொதுவாக எனக்கு அவ்வளவாக் படமெடுத்துக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே இந்திவிற்க்கு வெளியே பல இடங்களிலும் இந்தியாவில் சில இடங்களிலும் நிலவும் CCTV பொருத்தும் போக்கை வெறுக்கிறேன், CCTV கேமராக்களை கண்ட இடங்களில் பொருத்துவதை எதிர்த்து போராட வேண்டும்.

பாதுகாப்புக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அவை ஏற்ப்புடையவை என்றாலும் சீக்கிரமே இதற்கு மாற்று கண்டுபிடிப்பது நலம். குறைந்தபட்சம் CCTV பொருத்துவதற்கான வரன்முறைகள், எவ்வளவு நாட்கள் படங்களை வைத்திருக்கலாம், படங்களின் சேமிப்பிற்க்கு தேவையான பாதுகாப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். இதனை அரசாங்கம் செய்யாமல் IEEE, ISO போன்ற தொழில்முறை குழுக்கள் வரையறுக்கலாம்.

2 comments:

Nirek said...

When we go to tour, I intentionally avoid using my digicam these days for the same reason as you cited. Too many digicams are popping up and it looks odd!

U get offended for capturing ur image in CCTV cameras in public??! :)

பத்மகிஷோர் said...

என்னை பொது இடங்களில் படம் பிடிப்பதை சகித்துக்கொண்டாலும், அந்தப்படங்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, எப்போது அழிக்கப்படும் போன்றவைகளை ஒழுங்குபடுத்துவது நல்லது , நீங்கள் வீடியோ துறையில் நிபுணத்துவம் பெற்றவர் உங்கள் கருத்தை முன்வைத்தால் மகிழ்வேன்