Friday, August 24, 2007

ராஜதந்திரி ரோனன் சென்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருக்கும் போது, இதனை எதிர்பவர்களெல்லாம் "தலை இல்லாத முண்டம்" என்கிற ரீதியில் இந்திய தூதர் ரோனென் சென் கருத்து கூறியுள்ளார்.


பிஜேபி, சிபிஎம் என்று ஆளாளுக்கு அவரை பிடித்து எகிற ஆரம்பித்துளார்கள். இது எனக்கு நல்ல ராஜதந்திரமாகவே படுகிறது. இரண்டு வருடங்கள் பேசிப்பேசி போட்ட ஒப்பந்ததை குப்பையில் கடாச வேண்டும் என்ற இந்தக்கட்சிகளின் கோரிக்கை, இப்போது ரோனன் சென்னின் சீட்டைக்கிழிக்க வேண்டும் என்கிற அளவுக்கு இறங்கி வந்துள்ளது.

விவாத்ததை ஒரு உப்பு பெறாத விஷயத்தின் பக்கம் திருப்பிய ரோனென் சென் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை நல்ல ராஜதந்திரிகள் தான்.

2 comments:

Nirek said...

Do you think opposition will settle with firing of ronan sen??! they may come back again towards agreement...

btw when i am reading this, the hype over the left's opposition seems to be gone forever to silence....cool!

Anonymous said...

உன்மையில் இதுதான் ராஜதந்திரம்.. இல்லையெனில் கம்யூனிஸ்டுகளுக்கு வேறு விஷயம் கிடைக்காமல் இந்த் ஒப்பந்தத்தையே பிடித்து தொங்கிகொண்டிருப்பார்கள்.. நன்றாக எழுதுகிறீர்கள்.. ஜெயக்குமார்