Tuesday, September 04, 2007

அணுசக்தி ஒப்பந்தம்-சீனா-Mitrokihn-

Mitrokihn Archives என்னும் புத்தகம் வெளிவந்தபோது நாடு சில நாட்கள் அல்லோலகல்லோலப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். சில நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல அந்த விஷயமும் அமுங்கிப்போனது. அந்த நாளைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு KGB தாராளமாக 'உதவி' செய்ததையும் அதற்கு தக்க வகையில் அவர்கள் தேசதுரோக கைம்மாறு செய்த்தாகவும் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது.


இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை இன்று இடதுசாரிகள் தீவிரமாக எதிர்க்கிறார்கள், இன்னும் சில பல ஆண்டுகளில் சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் (ஒருவேளை) மிட்ரோகின் போல யாராவது புத்தகம் எழுதப்புறப்படலாம். ஆகவே எதிர்ப்பவர்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இடதுசாரிகள் அத்வானியை போல் எதிர்பது போல் எதிர்த்து ஆதரிப்பது போல் ஆதரித்துவிடலாம். :-)

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை நான் ஆதரிக்கிறேன். காரணம்.

1. சீன அரசின் People's Daily அன்றாடம் இந்த ஒப்பந்தத்தை கரித்துக்கொட்டுகிறது
2. எங்களுக்கும் இது போன்ற ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று முஷாரப் தினமும் கேட்பது

முஷாரப் பற்றி எழுதும் போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. இந்த ஒப்பந்ததின் ஆரம்பகட்டத்தில் அவர் பாகிஸ்தானுக்கும் இது போன்ற ஒப்பந்ததை கோரி ஒரு மாற்று வழியையும் முன்வைத்தார்.

அதாவது அமெரிக்காவே தன்னுடைய ஆட்களை வைத்து அணுவுலைகளை நிர்மாணிக்கவேண்டும். அவர்களே மின்னுர்பத்தி செய்ய வேண்டும், மின்சாரத்தை மட்டும் பாகிஸ்தான் அரசுக்கு விற்க வேண்டும். இதுதான் முஷாரப் முன்வைத்த திட்டம்.

இந்திய அமெரிக்க பேச்சுவார்தையின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிக்கல் இல்லாத யோசனையாகவே படுகிறது.

இருக்கும் அணுவுலைகளை பிரிப்பது, யுரேனியம், எரிபொருள் மறுசுழற்சி, வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வு, NSG நாடுகளை தாஜா செய்வது, IAEA வின் சிறப்பு ப்ரோடொகோல்கள் என்று எந்தச் சிக்கலும் இருக்காது. We could have thought about it or did we?

3 comments:

Anonymous said...

//இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததை நான் ஆதரிக்கிறேன். காரணம்.

1. சீன அரசின் People's Daily அன்றாடம் இந்த ஒப்பந்தத்தை கரித்துக்கொட்டுகிறது
2. எங்களுக்கும் இது போன்ற ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று முஷாரப் தினமும் கேட்பது//

எப்படியெல்லாம் அனுகவேண்டியிரூக்கிறது.. ஒரூ ஒப்பந்தம் நமக்கு உகந்ந்ஹதா இல்லையா என தெரிய்ய...நல்ல பதிவு கிஷோர்.. ஜெயக்குமார்

Nirek said...

நல்ல பதிவு கிஷோர்..
the other idea of american's managing atomic reactors is not necessary, we have necessary technology for getting the power out of nuclear fuels. What's necessary is constant supply of fuel without sanction. That's the best deal from USA

பத்மகிஷோர் said...

அணுவுலைகளை நிர்மாணிக்கும் தொழில் நுட்பம் இருந்தாலும், குறுகிய காலத்தில் 30- 40 அணு மின் நிலையங்களை அமைப்பது கடினம்.
அதனால் அவற்றை இறக்குமதி செய்வது அவசியம் ஆகிறது.

இதற்காக GE போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் டேரா போட்டுள்ளனர். ஆனால் புதி உலைகளுக்கு NSG கட்டுபாடுகள் பல இருப்பதால். இந்திய அரசு நிறுவனங்களுக்கு பதிலாக, அமெரிக்க நிறுவனங்களே மின்னுர்பத்தி செய்து , மின்சாரதை மட்டும் நமக்கு விற்கலாம்.