Monday, September 10, 2007

செயலிழந்துவிட்ட பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகானத்தை ஒட்டிய , பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் வஜீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சில ஆண்டுகளாக தலிபான்களிடம் திக்குமுக்காடுவதை கண்டுவருகிறோம்.

கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி கிட்டத்தட்ட பாகிஸ்தான் ராணுவம் செயலிழந்து விட்டதை காட்டுகிறது. இருநூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தான் விரர்கள் (அரசு 150 என்கிறது, பழங்குடிகள் 300 என்கிறார்கள்) வெறும் பத்து தாலிபான் ஆதரவு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்கள்.
எந்த தாக்குதலும் இன்றி, பாகிஸ்தான் ராணுவம் ஒரு தற்காப்பு முயற்சி கூட எடுக்காமல், ஒரு துப்பாக்கி குண்டு கூட செலவாகாதவகையில், எதிர்ப்பே இன்றி சரணடைந்துள்ளார்கள். இதில் ஒரு துணை கர்னலும் அடக்கம். ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு இன்று 254 பேர் விடுவிகிக்கப்பட்டுளனர். (அப்போ கவர்மென்ட் சொன்னது தப்பு)

ஏன் இப்படி unprofessionalஆக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. எனக்கு படுகிற காரணங்கள்.

1. அரசியலில் வெகு ஆழமாக ஈடுபட்டு சண்டை போடும் திறமையை இழந்துவிட்டார்கள்.
2. கடந்த எட்டாண்டுகளாக பாகிஸ்தானின் பல்வேறு PSUக்களுக்கு இராணுவ அதிகாரிகள் தான் சேர்மன், எம்டி, எல்லாம், இரெயில்வே உட்பட. இப்படி சொகுசாக இருப்பவர்களை சண்டைபோடச் சொன்னால்.
3. அல்கொய்தா/தாலிபான் ஆட்கள் ராணுவத்துக்குள் முழுமையாக ஊடுருவிவிட்டார்கள்.

என்ன இருந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்பு இப்படி பலவீனப்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

4 comments:

ஊற்று said...

வணக்கம் நண்பரே. எனக்கு உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பண்டசோழநல்லூர் சொந்த ஊர். நீங்கள் வலைப்பதிவு எழுதுவது உண்மையில் சந்தோஷம். தொடர்புகொள்ளுங்கள் பேசுவோம்.http://oootru.blogspot.com & oootru@gmail.com

பத்மகிஷோர் said...

அடுத்த ஊர்க்காரரை பதிவுலகம் மூலமாக கண்டதில் மகிழ்ச்சி, நிச்சயம் நிறைய பேசுவோம் ஊற்று..

King Vishy said...

Might seem silly that am using English, but pls bear with me :)

Quite informative.. Hadn't heard of this news abt Pak. before! Truly shocking..

And like you said, it is definitely a threat to us too, as neighbours..

கானகம் said...

//பாகிஸ்தான் ராணுவம் சில ஆண்டுகளாக தலிபான்களிடம் திக்குமுக்காடுவதை கண்டுவருகிறோம்.//

திக்குமுக்காடெல்லாம் இல்லை. சரனடைதல் அவ்வளவே.

//3. அல்கொய்தா/தாலிபான் ஆட்கள் ராணுவத்துக்குள் முழுமையாக ஊடுருவிவிட்டார்கள்.//

இதுதான் உன்மை அல்லது இன்னொரு தாலிபான் அரசு அமைய சத்தமில்லாமல் அடிகோலுகிறார்கள் சரனடைவதின் மூலம்.

//என்ன இருந்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்பு இப்படி பலவீனப்பட்டுள்ள நிலைமை மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.//

சரியான கனிப்பு. ஆனால் மேதகு பிரத்மர் அல்லது திரைமறைவு பிரதமர் இருவருக்கும் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களது இப்போதைய கவனமெல்லாம் எப்படி திரும்பி அடித்த ராமர் பானத்தை தன்னை தாக்காமல் காப்பது என்பதுதான்..
ஜெயக்குமார்