Friday, October 05, 2007

இரண்டு சர்வாதிகாரங்களின் கதை.

பாகிஸ்தான், பர்மா என்று இந்தியாவின் இரண்டு அண்டைநாட்டுச் சர்வாதிகாரங்கள் இப்போது சிக்கலில் இருக்கின்றன. இரண்டும் வெவ்வேறு திக்கில் பயணிக்கின்றன.

நவாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு (மறுபடியும்) நாடுகடத்தப்பட்ட போது பெரும் கொந்தளிப்பி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .

கடந்த ஐந்து ஆண்டுளாக (முன்னாள் சிட்டிபாங்க் அதிகாரி) பிரதமர் சவுகத் அஜீஸ் தலைமையில் நடக்கும் பொருளாதார சீர்திருத்தமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம்.

மதவெறி அமைப்புக்கள் பலமாக இருந்தாலும், இன்றைய பாகிஸ்தானி மிடில் க்ளாஸ்களிடம் மேற்கத்திய மோகமே அதிகமாக உள்ளது. லாகூர் கல்லூரிப் பெண்கள் அணியும் உடைகளிலேயே இதைக்காணலாம். பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கம் தற்போது அரசியலில் கவனம் செலுத்தாமல் ஜப்பான் தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தியா போன்று இன்னொரு ஆசிய புலியாக உருவாகத்தான் நினைக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செய்தி தொலைகாட்சிகளின் தயவால் வெளிப்படையான அரசியல் வவாதங்கள் நடக்கின்றன. தலைமை நீதிபதி பதவிநீக்க விவகாரத்தை அடுத்து நீதிமன்றங்களும் தன்னிச்சையாக இயங்குகின்றன.

இதுவே பர்மாவில், ஆங்க் சான் சூ கீ போன்றொரின் செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன , ஒரு செய்தி கூட வெளியிடப்படுவதீலை. கண்டிப்பாக ராணுவத்தை மீறி நீதிமன்றங்களால் செயல்பட முடியாது.

இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சியின் கிழிருந்தாலும் (பாகிஸ்தானில் விட்டு விட்டும், பர்மாவில் தொடர்ந்தும்) பாகிஸ்தானிய ஆட்சி ஓரளவுக்கு திருந்துவது போல் தெரிவதற்க்கு காரணம் உலக நாடுகள் இன்று வரை பாகிஸ்தானை புறக்கணிக்காமல் அரவணைத்து செல்ல முயன்றது தான். ஆனால் பர்மாவின் மீதோ தொடர்சியாக பொருளாதார தடை விதித்து பர்மா நாட்டையே தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்போது பர்மா அரசு யாரையும் மதிப்பதில்லை. உலக மீடியா சொல்வதையும் கண்டுகொள்வதில்லை.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு அரவணைப்பினால் பாகிஸ்தானிய ஆட்சியில் ராணுவந்தின் பிடி நழுவுகிறது.

தொடர்ந்து வரும் வெளிநாட்டு புறக்கணிப்பினால் பர்மீய ஆட்சியில் ராணுவந்தின் பிடி இறுகுகிறது.

Daily Times என்னும் பாகிஸ்தானிய நாளிதழில், சிங்கை பொருளாதார பேராசிரியர் கிஷோர் (அட இவரும் கிஷோர் தான்) மக்பூபானியின் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் வாசிக்க.

3 comments:

கானகம் said...

//நவாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு (மறுபடியும்) நாடுகடத்தப்பட்ட போது பெரும் கொந்தளிப்பி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .//

Because He is out of country for a long time. Moreover, Pak people is targetting Musharraf for his next election and more you out of country and not in mainstream politics the vigour will go. Musharaf is the classical example.

//இன்றைய பாகிஸ்தானி மிடில் க்ளாஸ்களிடம் மேற்கத்திய மோகமே அதிகமாக உள்ளது. லாகூர் கல்லூரிப் பெண்கள் அணியும் உடைகளிலேயே இதைக்காணலாம். //

Not only Lahore But also wherever Pakistani girls are there you can see thier culture.

//பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கம் தற்போது அரசியலில் கவனம் செலுத்தாமல் ஜப்பான் தென் கொரியா, மலேசியா, சீனா, இந்தியா போன்று இன்னொரு ஆசிய புலியாக உருவாகத்தான் நினைக்கின்றனர்//

Is it possible??? Pakistan is already sinking and Azis is doing his level best to stop the further sinking. To match with India in technology and export, Malasiya's liberalization, China's iron handed rule only made these countries to this level. instead Pakistan's only agenda in the last decade was only destabilizing India. I dont think their attitude will change and they can comeup.

For your information, in Oman, Qatar, saudi pakistani visa aplications are very carefully scrutinized before issuing the visa though all these countries are Musilms. That much confident they have built in this region. Where as Indian visas never been stopped and all the quotas are fully utilized.


//தொடர்ந்து வரும் வெளிநாட்டு அரவணைப்பினால் பாகிஸ்தானிய ஆட்சியில் ராணுவந்தின் பிடி நழுவுகிறது.தொடர்ந்து வரும் வெளிநாட்டு புறக்கணிப்பினால் பர்மீய ஆட்சியில் ராணுவந்தின் பிடி இறுகுகிறது.//

I also feel so. But let us wait and see what will be the outcome.

Jeyakumar

Nirek said...

That was a analysis from a diff angle!

பத்மகிஷோர் said...

ஜெயக்குமார்,

பாகிஸ்தான் நாட்டை, இதுவரை யாரும் கைவிடாமல் அரவணைத்து செல்லுவதால் அந்த நாடு தப்பி பிழைக்கும் சாத்தியக்கூறு நிறையவே உள்ளது.

ஆனால் கொடுங்கோன்மையின் கடைசி புகலிடங்கள் (outposts of tyranny- Myanmar ,north korea, sudan, belarus etc.,) என்று அழைக்கப்படும் நாடுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் நிலைமை கை மீறி சென்று விட்டது.

இனி இந்த நாடுகளை சாதாரண நிலைமைக்கு கொண்டுவருவது எளிதல்ல.