Wednesday, October 24, 2007

தெருக்களை சுத்தம் செய்ய சீன டெக்னிக்


சீனாவின் ஹெபேய் மாகணத்திலுள்ள கிங்ஹுவாங்க்டோ நகரில் ஒரு ட்ரைசைக்கிள் மற்றும் ஒரு டஜன் துடைப்பங்களைக்கொண்டு தெருக்களை சுத்தம் செய்யும் வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மோட்டரில் இணைக்கப்பட்ட துடைப்பக்கள் இடப்புரமாகவும் வலப்புரமாகவும் சுழலச்செய்து தெருக்களில் உள்ள குப்பைகளை ஓரமாக குவிக்கிறது. பின்னர் ஓரமாக குவிந்த குப்பைகளை வேறொரு இயந்திரம் மூலமாக அள்ளுகிறார்கள்.


நன்றி Ananova, Daily Times.

4 comments:

வவ்வால் said...

ஏற்கனவே அப்படி தெருக்களை கூட்டி , அதுவே அல்லும் இயந்திரங்கள் இருக்கே, சீன குப்பை பெருக்கும் எந்திரம் கொஞ்சம் உள்ளூர் தனமாக இருக்கு.

சென்னையில் கூட ஓனிக்ஸ் கொஞ்ச காலம் அப்படி ஒரு எந்திரத்தை ஓட்டிப்பார்த்தது. ஒரு ஆட்டோ அளவுக்கு தான் இருக்கும் அடியில் துடைப்பம், ஒரு வாக்குவம் கிளீனர் எல்லாம் இருக்கும் குப்பை மீது ஓட்டி சென்றாலே கூட்டி அள்ளிவிடும்.ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சுத்தமாக பெருக்கவில்லையோ் அல்லது வேறு ஏதோ பிரச்சினை என அந்த எந்திரத்தை மூட்டை கட்டி விட்டார்கள்.

ஒரு வேளை சாலைகள் பள்ளம் இல்லாமல் சீராக இருக்க வேண்டும் போல.

பின்னர் மனித சுத்தப்படுத்துதல் என்று போய்விட்டார்கள்.

பத்மகிஷோர் said...

நன்றி வவ்வால்,

மற்ற சீன பொருட்களைப்போல இதுவும் செலவில்லாதது, பெரிதாக பராமரிக்கவும் வேண்டாம் என்று தெரிகிறது.

ஓனிக்ஸின் இயந்திரம் கொஞ்சம் ஹைடெக் நிறைய பராமரிப்பு சிக்கல் இருந்திருக்கலாம்

கானகம் said...

எதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராதோ அதையெல்லாம் செய்து பார்த்து விட்டு இது நமக்கு சரிப்படாது என்று தீர்மாணிப்பது சீனர்களின் பழக்கம். இந்த முறைக்கு செலவு எதுவும் இல்லை என்ற பட்சத்தில் இன்னும் கொஞ்சநாள் இதை செய்து பார்ப்பார்கள். அவர்களுக்கு அலுக்கும் வரை...

பத்மகிஷோர் said...

கருத்துக்கு நன்றி கானகம் ஜேகே, சிறிய அளவில் பரிசோதித்துப் பார்ப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது..