முஷாரப்,பிலாவல்,பக்னர்
வழக்கமாக NDTV , CNN IBN போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விவாதங்களையும் SMS மூலமாக நடைபெறும் ஓட்டெடுப்புக்களையும் நான் பொருட்படுத்துவதில்லை.
இவற்றால் எந்த ஒரு பெரிய பலனும் வந்துவிடாது என்பதால் மட்டுமல்ல, இவற்றில் பங்குபெருவோர் எதையும் செய்யமல் பெரிதாக சாதித்து விட்டதைப்போல் எண்ணுவதாலும் கூட.
நேற்று NDTV ல் ஓட்டெடுப்புக்கான கேள்வியை தற்செயலாக் பார்க்க நேர்ந்தது.
முஷாரப் இப்போது பதவி விலக வேண்டுமா? என்பதே கேள்வி.
இது நம்மைப் பொருத்த வரை தேவையில்லாதது மட்டுமல்ல் ஒரு சொசெசூ முயற்சியும் கூட.
பாகிஸ்தானின் அதிபர் பதவியில் தொடரவேண்டுமா என்கிற கேள்வியை இந்திய நேயர்களிடம் ஒரு தொலைக்காட்சி முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதே போல் ஒரு பாகிஸ்தான் டிவி மன்மோகனை சிங்கைப்பற்றி கருத்துக் கணிப்பு நடத்தினால் நாம் ஏற்றுக்கொள்வோமா.
பாகிஸ்தானின் நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொண்டு ராஜாங்க ரீதியாக நடவடிக்கை எடுப்பது வேறு, இதுபோல் வெளிப்படையாக மூக்கை நுழைப்பது வேறு.
-----
குடும்ப அரசியலின் பரிணம வளர்ச்சியாக இப்போது 19 வயது பிலாவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக வந்துள்ளது சோகத்திலும் ஒரு காமெடி. பிலாவல் புட்டோ ஜர்தாரி, ஜுல்பிகார் அலி புட்டோவை நேரில் கண்டது கூட இல்லை.
ஜியா உல் ஹக் இறந்த போது ஒரு வயது இருக்கும்.
'ஜின்னாவுடனும், ஜுல்பிகார் அலி புட்டோவுடனும் அரசியல் செய்த நான் இப்போது யார் யாருடனோ அரசியல் செய்ய வேண்டியுள்ளதே' என்று கிழ போல்டு யாரும் சொல்லாமல் இருக்க பிலாவலுக்கு என் வாழ்த்துக்கள்.
-----
ஸ்டீவ் பக்னர் இந்த முறையும் சொதப்பியதாக தெரிகிறது. நான் சிறு பிள்ளையாய் இருந்த காலத்திலிருந்து அவர் அம்பயராக இருக்கிறர். சீக்கிரம் ரிடையர் ஆவது நலம்.
---
முஷாரப்,பிலாவல்,பக்னர் இவங்கள வெச்சு இன்னிக்கு மசாலவை அரச்சாச்சு (எவ்வளவு நாள் தான் மொக்கைப்பதிவுனு சொல்லறது, பதிவுலகம் அடுத்த கட்டத்துக்கு போக வாணாவா?)