Saturday, December 16, 2006

கொள்கைப் பித்து

கொள்கைக்காக மாண்டவர் உண்டு , கொள்கைக்காக வாழ்வின் பல இன்பங்களை தொலைத்தவரும் உண்டு ஆனால் கொள்கையை கடைபிடித்து அதனால் இன்பம் பெற்று வாழ்ந்தவர் உண்டா?

ஒருவரிடம் போய் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று கேட்டால் "இது என் கொள்கை" என்பார். ஏன் இந்த கொள்கையை கொண்டுள்ளீர்கள் என்று கேட்டால் 'இது சிறந்ததாக எனக்குப் படுகிறது' என்று சொல்வார். அதாவது அவருடைய ரசனை அது, ஒருத்தருக்கு இனிப்பு பிடிக்கும், இன்னொருவருக்கு காரம் பிடிக்கும் , இனிப்பு பிரியரிடம் போய் உனக்கேன் காரம் பிடிக்கவில்லை என்று சண்டை போட முடியாது. மாற்றுக்கொள்கை கொண்டவரும் அது போலத்தான். கொள்கைக்காக சண்டைபோடுவது வீண்வேலை.


'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்கிறார் பாரதியார். அதாவது அடிமைத்தனம் நம்மீது திணிக்கப்படும் ஒன்று , அந்த அடிமைத்தனத்தயே மோகித்திருப்பது அதனினும் கீழான இழிநிலை.

இதனைவிட இழிவான நிலை தானே விரும்பி அடிமையாகி அந்த அடிமைத்தனதை மோகித்திருப்பது. தனக்குத் தானே செய்துகொள்ளும் அடிமைத்தனம் கொள்கைக்கு அடிமையாவது, போதை பொருட்களுக்கு அடிமையாவது போன்றவை. இந்த நிலையை மோகித்திருப்பதால் இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபடுவது நலம்.


அதற்காக கோட்பாடற்று மிருகம்போல் திரிய வேண்டியதில்லை.
கொள்கை உப்பைப்போன்றது , அது இல்லாவிட்டால் வாழ்வு ருசிக்காது, அதிகமகவும் இருக்கக்கூடாது.

Tuesday, December 05, 2006

சங்கீத சீசன் சந்தேகம்

சங்கீத சீசன் துவங்கப்போகிறது,
'தமிழில் ஏன் பாடுவதில்லை' போன்ற கேள்விகள் இந்த வருஷமும் வரும். வரட்டும்.

நான் சொல்ல வந்த விஷயமே வேறு.
சில சபாக்கள்ளிலும் டிவி யில் வரும் மார்கழி மாச ஸ்பெசல் இசை நிகழ்ச்சிகளிலும் இரண்டு பாட்டுக்கு நடுவே ஆடியன்ஸ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் சடங்கு நடைபெறும்.

நான் 3 - 4 வருஷமாக பார்க்கிறேன், ஆண் இசை வல்லுனர்கள் தமிழில் கேட்க்கப்படும் கேள்விக்கு தமிழில் பதில் அளிப்பார்கள். பெண்பாடகிகளிடம் தமிழில் கேள்வி கேட்டாலும் பீட்டர் பாஷையில் "திஸ் ராகா இஸ்" என்று ஆரம்ப்பித்து ஜல்லியடிப்பார்கள். சில விதிவிலக்குகள் உண்டு ( அருணா சய்ராம் சௌம்யா இருவரும் நல்ல தமிழில் பதில் அளிப்பார்கள்). முன்பு சுப்புடு அவர்கள் ஒரு பெண் கலைஞரை "அவர் ஏப்பம் கூட ஆங்கிலத்தில் தான் விடுவார்" என்று குறிப்பிட்டார்.

பொதுவாக, பெண் பாடகிகளுக்கு இப்படி ஒரு ஆங்கில மோகம் ஏன்?

Thursday, November 30, 2006

சோதனை மேல் சோதனை

வாழ்க்கையில் சோதனை இருக்கலாம், ஆனால் சோதனையே வாழ்க்கையாக சிலருக்கு அமைகிறது.

ஜான் லய்ன் , இவர் இங்கிலாந்தில் வசிப்பவர். இவருக்கு இதுவரை 17 விபத்துக்கள் நேர்ந்துள்ளது (கின்னஸ் சாதனையானு தெரியல) .

இவரை இரண்டு முறை மின்னல் தாக்கியுள்ளது, 3 முறை கார் விபத்தில் சிக்கியிருக்கிறார், ஒரு முறை தண்ணீரில் முழுகியிருக்கிறார். ரீசன்டாக வடிவேல் ,விவேக் ஸ்டைலில் சாக்கடையில் விழுந்ததில் எலும்பு முறிந்துள்ளது.

அன்னாரை பற்றிய தகவல்களுக்கு.

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி இப்போதுதான் உறைக்கிறது.

Monday, November 27, 2006

In Spite of the gods - புத்தக விமர்சனம்



இதை எழுதிய Edward Luce, 5- 6 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு ஆங்கில நிருபர் (Financial Times)

அரசு அதிகாரிகள், சாதி மத அரசியல், குடும்ப அரசியல், காலம்தாழ்த்திக் கழுத்தறுக்கும் நீதிமன்றங்கள், ஊழல், உள்கட்டமைப்பு குறைபாடு, வறுமை, படிப்பறிவின்மை போன்றவற்றை எல்லாம் மீறி இந்தியா எப்படி வளருகிறது என்பதனை பற்றிய புத்தகம்.

நகரங்களுக்கு பெருமளவு குடிபெயர்ந்தாலும் இந்தியர்களுக்கு கிராமங்கள் மீது இருக்கும் தணியாத காதலையும். நகரங்களில் இடக்கரடக்கலாக தொடரும் சாதி அமைப்பையும். புதிய தலைமுறை பணக்காரர்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பணத்தை வாரி இரைப்பதையும் இவற்றுக்கு நடுவே கோர முகம் காட்டும் வறுமையையும் பெண்சிசுக்கொலைகளையும் , எய்ட்ஸ் தாக்குதலையும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

நாட்டில், அர்த்தமற்ற பல வணிக கட்டுப்பாடுகளையும் வரிகளையும், ஊழல் செய்ய ஒரு வாய்ய்பாக கருதி , அதிகாரிகள் தளர்தாமல் விட்டு வைத்திருப்பதையும், அதனால் ஏற்படும் தொழில் வளர்ச்சி பாதிப்பையும் உதாரணங்களுடன் அழகாக குறிப்பிடுகிறார்.
இந்திய கோர்ட்களில் நடக்கும் வழக்குகளால் முடங்கியிருக்கும் சொத்து சுமார் 35,000 கோடியாம்.

அரசியலைப் பொறுத்தவரை இந்திய அரசியல்களத்தை காங்கிரஸ் , பாஜக, மற்றும் பிராந்தியக்கட்சிகள் என்று பிரித்து அலசி கூறப்பட்டுள்ளது. இடதுசாரிகளை பற்றி அவ்வளவாக இல்லை.

இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை காஷ்மீருடன் சம்பத்தப்படுத்தி சொதப்பிவிட்டார். ஆனால் முஸ்லிம்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஓரளவு எழுதியிருக்கிறார்.

சில factual errors, உதாரணம், வைசியர்களை நாடாளும் சாதி என்று குறிப்பிட்டு 3- 4 முறை தவறாக வந்துள்ளது. இறுதி அத்தியாயத்தில், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும், காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும், பாஜக என்ன செய்ய வேண்டும், என்று ஏகத்துக்கும் அட்வைஸ் மழை. இதை தவிர்த்திருக்கலாம். நாட்டின் இன்னொரு பிரச்சனையான தீவிரவாதத்தைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை.

தற்கால இந்தியாவை பற்றி ஒரு நல்ல புத்தகம். படிக்கலாம்.

டிஸ்கி. ஜெயலலிதாவை புகழ்ந்து சில வரிகள் வருவதால் திராவிட அன்பர்கள் இதை தவிர்ப்பது நலம்.

Thursday, November 23, 2006

கோர்ட்டில் தமிழ்

ஐகோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழை அறிமுகப்படுத்த அரசு முடிவிசெய்துள்ளது.
வரவேற்ப்போம். சட்ட சம்பந்தப்பட்ட கோப்புகள் அங்கில அறிவுடையவர்களுக்கே கூட எளிதில் புரியாது, ஒரே gobbledygook ஆக இருக்கும். ஆது போல் கடினமான உரைநடை தமிழில் இல்லாமல் பழகு தமிழில் இருந்தால் இந்த முயற்சி வெற்றி பெரும்.

ஆனால் இது நடக்காது என்று தான் நான் நினைக்கிறேன். வழக்கு நடவடிக்கை பொதுமக்களுக்கு புரியாதவரை தான், வக்கீல்கள் தேவையற்ற சட்டச்சிக்கல்களை எழுப்பி , காலத்தை கடத்தி, பணம் கறக்க முடியும்.

:-)

Tuesday, November 21, 2006

தெய்வங்களையும் மீறி.

எட்வர்ட் ல்யூஸ் எழுதிய "இன் ஸ்பைட் ஆஃப் காட்ஸ்" படித்து வருகிறேன். இந்திய அரசின் செயல்பாடுகளை பற்றி நகைச்சுவையுடன் விரிவாக எழுதியிருக்கிறார்.

2000 ம் ஆண்டு மத்திய இரும்பு அமைச்சகத்திடம் இருந்து ஒரு அவசர மகஜர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சென்றது , விஷயம் என்ன வென்றால் , துறை அதிகாரிகள் கோப்புகளில் நீலம் அல்லது கருப்பு நிறத்தில் எழுதவேண்டுமா இல்லை பச்சை / சிகப்பு நிறத்தில் எழுத வேண்டுமா என்ற சந்தேகத்தை போக்குமாறு சீர்திருத்தத்துறையிடம் கேட்டிருந்தது.

நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் ஒரு குழு அமைத்து 3 வாரம் பேசி , இந்த விஷயத்தில் பர்சனேல் துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்தனர்.

பர்சனேல் துறை இன்னொரு கமிட்டி அமைத்து 6 வாரம் பேசி, விஷயத்தை பயிற்சித்துறையிடம் கொண்டு சென்றது.

அவர்கள் மேலுமொரு குழு அமைத்து 3 மாதம் பேசி , முதல் முறை எழுதும் போது நீல/கருப்பு பேனாவிலும் திருத்தங்களை செய்யும் போது பச்சை/சிகப்பு பேனாவிலும் எழுதலாம் என்று கருத்து சொன்னது.

எந்தெந்த அதிகாரிகள் பச்சை/சிகப்பு பேனாவில் எழுத "தகுதி" வாய்ந்தவர்கள் என்று கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டு, சில குறிப்பிட்ட "க்ரேட்" அதிகாரிகள் மட்டும் பச்சை/சிகப்பு பேனாவில் திருத்தங்கள் செய்யலாம் என்று வரையறுக்கப்பட்டது.


அன்று முதல் இந்தியாவில் இருந்த வறுமை , பசி, வேலையின்மை எல்லாம் நீங்கி சுபிட்சம் பிறந்தது.

Monday, November 13, 2006

பஸ்களில் பொன்மொழிகள்

அரசு பஸ்களில் கலைஞரின் பொன்மொழிகளை எழுதியது பிரச்சனை ஆகியுள்ளது.

'நான் நீ நாம்' போன்ற பொன்மொழிகளை விட இந்த மாதிரி பொன்மொழிகள் எழுதினால் சிக்கல் இருக்காது.

சரியான சில்லரை கொடுத்து டிக்கட் கேட்டு வாங்கவும். - கலைஞர்

திரும்பும் முன் சிக்னல் செய்யவும் - கலைஞர்

புகை பிடிக்காதீர் - கலைஞர்

கரம் சிரம் புறம் நீட்டாதீர் - கலைஞர்

Friday, November 10, 2006

நிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா?

இந்தியாவின் சிறந்த நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மாநில முதல்வர்களை பார்த்து 500 ஏக்கர் நிலம் வேண்டும் , 700 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்பது அன்றாட வாடிக்கையாக போய்விட்டது .


இது தவிர, இப்போதெல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலம் SEZ என்ற கூத்து வேறு , இது பற்றி வேறு பதிவில்.

ஒரு கேள்வி, சுலபமான கேள்வி தான் , 200- 300 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறாகள்? இந்திய நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பத்தில் சூரப்புலிகள் என்று கருதிக்கொண்டிருக்கின்றன , அந்த tech savvy தனந்தை கட்டடக்கலையிலும் காட்டலாம்.

1 இலட்சம் பேர் வேலை செய்ய வசதியாக ஐந்து 20 மாடி கட்டிடங்களை கட்டினால் போதும், 20 - 25 ஏக்கரில் வேலை முடிந்துவிடும். பெங்களுர் ITPL வெறும் 70 ஏக்கரில் சிறப்பாக இயங்குகிறது. 20 லட்சம் சதுர அடிக்கு கட்டிடம் இருக்கிறது. சுலபமாக 20000 பேரை தாங்கும்.

இப்படி எளிய வழி இருக்கையில் ஏன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கேட்கிறார்கள் ?
பலர் சொல்வது போல் கம்பனிகள் நில அபகரிப்பில் (land grab) ஈடுபட்டுள்ளனவா?

பிகு.

இது சில்வர் ஜூபிலி பதிவு. 25 பதிவு போட்டுட்டேன்.

Thursday, November 09, 2006

யார் குற்றம்?

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் கடைகளை மூடி சீல் வைக்க கோர்ட் சொல்லியபின் பலமான போராட்டம் நடக்கிறது. நமக்கு இந்த விஷய்தில் எந்த ஸ்டேக்கும் இல்லாததால் தெளிவாக பார்க்க முயற்சிப்போம்.

டெல்லி மாஸ்டர் ப்ளான் படி சில இடங்களில் வெறும் குடியிருப்புக்கள் தன் இருக்க வேண்டும். கடைகள் வணிக வளாகங்கள் கூடாது. காலப்போக்கில் யாரும் கண்டுகொள்ளாமல் (அல்லது கண்டும் காசு வங்கிக்கொண்டு) விட்டதால் கடைகள் பெருகின. சில கடைகள் 30 ஆண்டுகளாகக் கூட நடக்கின்றன. பலர் விற்பனை வரி, வாட் என்று பல வரிகள் கூட கட்டியுள்ளனர்.


யாரொ ஒருவர் ஒரு பொது நல வழக்கு போட்டதால் , கோர்ட் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.


இதற்கு முழு பொறுப்பு அரசாங்கமும், அரசு ஊழியர்களும் தான், கடைகளை கட்டும் போதே தடுக்கத்தவறிய அதிகாரிகளையிம், ஊழியர்களயும் கைது செய்து , வழக்குத்தொடரவேண்டும். அவர்களின் வேலையை பறிக்க வேண்டும்.

முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படும் போது கம்மென்று இருந்துவிட்டு கோர்ட் சொன்ன பிறகு இடித்துதள்ளுவது வெறும் பம்மாத்து வேலை. ஒவ்வொரு வார்டிலும் உள்ள அதிகாரிகள் தங்கள் பகுதியில் முறையின்றி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது . அப்படி ஏதாவடு கட்டப்பட்டால் தடுக்க வேண்டும் .


இவ்வாறு அவர்கள் பணியை செய்ய தவறிவர்களை கைது செய்தால் என்ன?

Monday, November 06, 2006

உங்கள் அறிவுக்கு சவால்!

பெங்களுரின் பிக் FM எனப்படும் ஒரு அற்புத பண்பலை அலைவரிசையில் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்கிறார்கள்.

உதாரணம் , வீரேந்தர் சேவாக்கின் ஃபர்ஸ்ட் நேம் என்ன,
1 ராகுல் 2 சச்சின் 3 யுவராஜ் 4 வீரேந்தர்

மசால் தோசையின் உள்ளே இருப்பது என்ன
1. வெண்டைக்காய் 2. உருளை 3. கத்திரிக்காய்.





இந்த கேள்விகளை பார்க்கும் போது முன்பு சன் ம்யூஸிக்கில் இரவு 9 மணிக்கு ஹேமா சின்ஹாவின் கேள்விகள் நினைவுக்கு வருகிறது,


ஹேமா சின்ஹா - `0` வை கண்டுபிடித்தது யாரு?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நம்ம நாட்டுக்காரங்களை இப்படி அழைப்பார்கள்
நேயர் - இந்தியர்கள்
ஹேமா சின்ஹா - சரியான பதில்


ஹேமா சின்ஹா - கல்லை தின்னும் பறவை எது?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நெருப்புனு ஆரம்பிச்சு ழினு முடியும்.
நேயர் - நெருப்புக்கோழி
ஹேமா சின்ஹா - சரியான பதில்

ஹேமா சின்ஹாவிற்க்காக ஒருவர் வலைப்பூ வேற ஆரம்பிச்சிருக்கார், அவர் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள். படத்தை அவரிடமிருந்து தான் சுட்டேன்.

Thursday, November 02, 2006

டெலி மார்கெட்டிங் சமாளிப்பு ஐடியா இலவசம்

டெலி மர்க்கெட்டிங் தொடர்பாக டோண்டு அவர்கள் எழுப்பிய கேள்விகள் digress ஆகி விவாதம் எங்கோ சென்றது, டெலி மார்கெட்டிங் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் என்ற பூர்வ பக்ஷம் மறக்கடிக்கபட்டுள்ளது.

'உங்களுக்கு வீட்டு லோன் வேண்டுமா?' என்று போனில் கேட்கிறார்கள், வீடு வாங்குவது பெரிய விஷயம்.
வீடு வாங்குபவர் அதற்கு வேண்டிய பணத்தேவைகள் , கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வட்டி விகிதம், இன்ன பிற சமாச்சாரங்களை கணக்கிட்டு தான் அடுத்த அடியை எடுத்து வைப்பார்.

'லோன் வேண்டுமா ?' என்று போன் வருகிறதே சரி வீடு வாங்குவோம் என்று யாரும் முடிவெடுப்பதில்லை. பிறகு ஏன் வீணாக போன் செய்கிறார்கள்.

இன்சூரன்ஸ் , கார் லோன் , போன்றவையும் நெடு நாளைய திட்டங்கள் ஆதலால் ஒரு போனுக்கெல்லாம் யாரும் மசிய மாட்டார்கள்.

சமீபத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது , டாக்டர் ராதகிருஷ்ணன் சலையில் உள்ள ஒரு சிறிய ஐஸ்க்ரீம் கடையில் மதியம் 2 மணிஅளவில் இரு ட்ராபிக் போலீஸ்காரர்கள் ஓய்வு எடுத்துக்கோண்டிருந்தனர்.

அப்போது ஒருவரின் செல்பேசிக்கு ஒர் டெ.மா. கால் வந்தது , கடுப்பான போலிஸ்காரர் 'இவ்வளவு நேரம் வெய்யில்ல இருந்துட்டு கொஞ்சம் உக்காந்தா இப்டி போனா பண்றிங்க' என்று துவங்கி அவருக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தை ப்ரயோகங்களையும் செய்து முடித்தார்.


டெலி மார்கெட்டிங் உபத்திரவங்களை சமாளிப்பதற்காக நான் ஒரு எளிய உபாயம் வைத்துள்ளேன்.

வீட்டு லோன் , கார் லோன், க்ரெடிட் கார்ட், க்ள்ப் மெம்பர்ஷிப் போன்ற எந்த போன் வந்தாலும் , 'நான் அடுத்த வாரம் அமெரிக்கா போறேன் , திரும்பி வர 6 மாசம் ஆகும் , அப்புறம் பாக்கலாம்' என்று ஒரே போடாக போட்டு விடுவேன் .
அவர்கள் அப்பீட் ஆகிவிடுவார்கள்.

ஆகவே வலையுலக தமிழ் நண்பர்களே , உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா கொடுத்துள்ளேன் . வேறு யோசனை இருந்தால் பின்னூட்டமாக இடுங்கள்.

Tuesday, October 31, 2006

கார்காலத்தில் கார் ஓட்டுவது

சென்னை மழையை பற்றி தீபக் எழுதிய பதிவை பார்த்ததும் இதை எழுத தோன்றியது. மழை பெய்தால் சென்னையில் என்னை போன்ற கார் ஓட்டிகளுக்கு ஜாலி . பைக் ஆசாமிகள் குறுக்கே வரமாட்டார்கள் , நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மழை இல்லத போது என்ன தான் நாம் சொகுசு வண்டியில் குளு குளு என்று போனாலும் , பொசுக் பொசுக் என்று சந்தில் புகுந்து விர்ரென பறக்கும் பைக்குகளை பார்த்தால் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை ஏற்ப்படும் . மழையில் பைக்காரர்கள் வண்டியை ஓரம்கட்டி பெட்டிகடை, பஸ்ஸ்டாப் என்று ஒதுங்குவதை சாடிச புன்னகையுடன் பார்த்துக்கொண்டு தண்ணீரை இருபக்கமும் வாரித்தெளித்தப்படி போகும் போது கிடைக்கும் திருப்தியே தனி தான். இதெல்லாம் மழை விடும் வரை தான், மழை விட்டவுடனே ஓரம்கட்டிய எல்லா பைக்குகளும் ரோட்டில் ஆஜர் ஆகி கர் புர் என்று சத்தம் போட்டபடி ட்ராபிக் ஜாம் ஆக்குவார்கள். கார் ஓட்டிகள் மழை பலமாக அடித்துக்கோண்டிருக்கும் போது கிளம்பிவிடவேண்டும் , சீக்கிரம் போய்விடலம். மழை விட்டுதோ போச்சு . பயணம் நாஸ்தி தான்.

தோசை போஸ்ட் மார்டம்

பெங்களுர் ஸ்டைல் சாப்பாடு போர் அடித்ததால், சென்னை சரக்கு சாப்பிட CMH ரோட்டில் உள்ள அடையார் ஆனந்த பவன் போனேன். அங்கே ஒரு யுவனும் யுவதியும் ஒரே தோசையை ஒரே தட்டில் காதலுடன் சட்னி கசிந்துருக சாப்பிட்டனர், ஒரே இளநீரில் இரன்டு ஸ்ட்ரா ஒரே கூல் ட்ரிங்க்கில் இரண்டு ஸ்ட்ரா என்று காதல் காட்சிகளை பார்த்த எனக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது . ஒரு விசேஷம், இருவரும் தோசையை ஸ்பூனால் சாப்பிட்டனர் , ஆளுக்கு இரண்டு ஸ்பூன், அதில் ஒரு ஸ்பூனால் தோசையை தட்டோடு அழுத்தி இன்னொரு ஸ்பூனால் கொஞ்சம் சாம்பாரை அபிஷேகம் செய்து , ஸ்புனால் ரம்பம் போல் ராவி தோசையை பிட்டு உள்ளே தள்ளினர்.
முறுகல் தோசையை செத்த பிணம் போல் போஸ்ட் மார்டம் செய்தது தோசை பிரியனான என்னை கடுப்பேற்றியது.
சாப்பிடும் முறை தெரியாமல் பல உணவுகளை ஆர்டர் செய்து சொதப்புவது இந்தியர்களுக்கு கைவந்த கலை.

அதிலும் சில அமெரிக்க ரிட்டர்ன் தேசிக்கள் வடை சாப்பிடுவதை பார்க்க சூப்பராக இருக்கும் . வடையை அப்படியே சாம்பாரில் தோய்த்து கடிப்பார்கள் . டீக்குள் பிஸ்கட் தோய்த்து சாப்பிடுவதைப்போல. கண்றாவி.

-----------
சனி பெயர்ச்சி "குரு" பெயர்ச்சி போல ராமதாஸ் கூட்டணி பெயர்ச்சி நடக்கும் போல இருக்கிறது. திமுக பச்சை துரோகம் செய்துள்ளது என்று சொல்கிறார். பச்சை அதிமுக கலர். திமுக மஞ்சள் துரோகம் மட்டுமே செய்யும்.

Monday, October 30, 2006

இது கொஞ்சம் Hilarious

நேற்று காலை கம்பனி கெஸ்ட் ஹவுசில் இருந்து நண்பன் வீட்டிற்க்கு குடி மாறினேன், 6 மணிக்கு எழுந்த பிறகு ரெடியாக வேண்டி ஷேவிங் செய்ய ப்ரஷ்ஷில் க்ரீமைத்தடவி முகத்தில் தேய்த்தேன் , ஒரு நறுமணம், என்ன இது இப்படி ஒரு மணம் வீசுதே என்று பார்த்தால், நான் ப்ரஷ்ஷிலிட்டது ... அட டூத்பேஸ்ட்.

Friday, October 13, 2006

Orkut குழுக்கள்

ஒர்குட்' ல் எது எதற்கெல்லாம் குழு அமைப்பது என்று ஒரு வரன்முறையே இல்லாமல் போய்விட்டது .
பள்ளி / கல்லூரி பஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட தடத்தில் செல்பவர்கள் கூட குழு ஆரம்பித்து விட்டார்கள்,

அதான் தினமும் ஒரே பஸ்ஸில் ஒண்ணா போறங்களே அப்பவே பேசிக்கலாமே , இவங்களுக்கு எதுக்கு ஒர்குட் குழு?

இது ஒரு ஒர்குட் குழுவே இல்ல அப்படினு ஒரு குழு (ஆய்யோ சாமி!! தாங்க முடியலடா!)) இருக்கு (This is not an orkut commmunity) .

ஒர்குட்ல சிலபேர் நூத்துக்கணக்கான குழுவில உறுப்பினரா இருக்காங்க, எல்லா குழுவில நடக்கற எல்லா த்ரெட் டையும் எப்படி பாப்பாங்க? படிப்பாங்க? இல்ல சும்மாவாச்சும் மெம்பர் ஆகி பிலிம் காட்டுறாக்களா?

நிறைய குழுவில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு (Member of Too many communities) ஒர் தனி குழு வேற இருக்கு (அட தேவுடா) .

Thursday, October 12, 2006

ந்யூமெராலஜி என் அனுபவம்

ந்யூமெராலஜியை பற்றிய முந்தய பதிவில் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். இந்தப்பதிவு சோதிடப்பித்து மக்களை எப்படி பிடித்துக்கொண்டு ஆட்டுவிக்கிறது என்பதை பற்றிய என் சொந்த அனுபவம்.
நான் +2 படித்த போது, எங்கள் பள்ளியில் ஒரு அறிவியல் கண்காட்ச்சியை நடந்தது, நானும் என் நண்பன் பாஸ்கரும் கொஞ்சம் கணிணி ஆர்வம் கொண்டத்வர்கள் அதனால் கணிணி அறிவியல் ஆசிரியை திருமதி கவுரி அவர்கள் எங்களை ஏதாவது ஒரு திட்டத்தை செய்யச்சொன்னார்கள்.
நாங்கள் சில நாட்கள் யோசித்து விட்டு ஒரு ந்யூமெராலஜி செயலியை செய்ய முடிவு செய்தோம்.

ஒரு "எண் கணித மேதை" எழுதிய புத்தகம் கிடைத்தது. அதை வைத்து பெயர், பிறந்த நாள் இத்யாதிகளைகொடுத்தால் பலன்களைச்சொல்லும் வகையில் ஒரு நிரலை உருவாக்கினோம்.
ஆப்போதய (1996) கம்ப்யூட்டர்களில் GUI கூட கிடையாது, நாங்கள் ஒரு Monochrome Monitor உதவி கொண்டு BASIC மொழியில் ஒரு நிரல் எழுதினோம்.

செயலி நன்றாக வேலை செய்தது. மற்ற மாணவர்கள் சில நல்ல செயலிகளை செய்திருந்தார்கள் . இந்தியாவின் அனைத்து ஊர்களை பற்றிய குறிப்புகளை வரைபடத்துடன் காட்டும் ஒரு நிரல், அறிவியல் தகவல்கள் பற்றிய ஒரு நிரல் என்று பல இருந்தன.
கண்காட்சி அன்று , மாணவர் , பெற்றோர், ஆசிரியர்களென அனைவரும் என் செயலி முன் அமர்ந்து சோதிடம் பார்த்தார்கள். மற்ற மாணவர்கள் கணிணி முன் அமர்ந்து ஈ ஓட்டினார்கள்.
பாஸ்கர் வேரு ஒரு திட்டதிலும் பங்கு பெற்றதால் அந்த வேலையை கவனிக்கச்சென்றுவிட்டான்.

நான் தனியாளக அனைவருக்கும் சோதிடம் பார்க்க வேண்டியதாயிற்று. எனக்கு பெருமிதமும், கடுப்பும் சேர்ந்து வந்தது. இரு நாட்களுக்குப்பிறகு ஒருவழியாக கண்காட்சி முடிந்தது. ஆனால் இன்று வரை மக்களின் சோதிடப்பித்தை பற்றி நினைத்து வருந்துகிறேன்.

Wednesday, October 11, 2006

ந்யூமெராலஜி- சில கேள்விகள்

சென்ற ஞாயிறு அன்று விஜய் டி வி யில் "நீயா, நானா" நிகழ்ச்சியில் ந்யூமெராலஜி பற்றி ஒரு விவாதம், ந்யூமெராலஜியை அறிவியல் பூர்வமானது என்று ஒரு கோஷ்டியும் இதனை எதிர்த்து ஒரு கோஷ்டியும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

ந்யூமெராலஜி (பொதுவாக ஜோதிடமே ) ஒரு டுபாக்கூர் மேட்டர் என்பது என் கருத்து.

என் நெடு நாளைய கேள்வியை ஒருவர் கேட்டார், அது , "ந்யூமெராலஜிப்படி பெயர் மாற்றம் ஏன் எப்போதும் ஆங்கிலத்தில் தான் செய்யா வேண்டும், தமிழ் ந்யூமெராலஜி கிடையாதா" என்பதே.

இதற்கு மழுப்பலாக ஏதேதோ கூறினர் ந்யூமெராலஜியினர்.

எனக்கு ந்யூமெராலஜி பற்றி இன்னொரு கேள்வி உண்டு,

ந்யூமெராலஜி சித்தர்களால் (!) அருளப்பட்டதென்றால் ,கலியுகாதி, ஸாலிவாஹன, விக்கிரம, கொல்லம், ஹிஜிரி, திருவள்ளுவர் , 60 வருட தமிழ் சுழற்சி, என்று பல நாட்காட்டிகள் இருந்தும், ஏன் ஆங்கில நாட்காட்டியையே பயன் படுத்த வேண்டும் ?

இத்தனைக்கும் சில நூற்றண்டுகளுக்கு முன்பு, ஆங்கில நாட்காட்டியிலிருந்து 15 நாட்களை ஒரு போப்பாண்டவர் அப்பீட் செய்துள்ளார் .

அந்த மிஸ்ஸிங் நாட்களின் கோள் நிலைகளை இவர்கள் கணக்கில் சேர்த்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை.

Thursday, September 28, 2006

சோனி ரீடர்

இசைக்கு அப்பிள் ஐபாட் போல , நூல் வாசிப்பில் புரட்சி ஏற்ப்படுத்த சோனி , ரீடர் எனும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது , வரும் அக்டோபர் 31 முதல் சந்தையில் கிடைக்கும், இப்போது சோனி வலைமனையில் ஆர்டர் செய்யலாம். விலை முன்னூற்றி சொச்சம் அமெரிக்க டாலர்.



இது உண்மையிலேயே நூல் வாசிப்பில் புரட்சி ஏற்ப்படுத்த போகிறதா இல்லை மைக்ரோசாப்டின் டாப்லெட் பி.சி. யை போல் ஃபனால் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Tuesday, September 26, 2006

சிதம்பரமும் ஊழல் ஒழிப்பும்

உலக வங்கி தன்னுடைய கடன் வழங்கும் கொள்கையில் சிறிய மாற்றம் செய்து , இனி ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி போன்றவைகளின் அடிப்படையில் வளர்ச்சித்திட்டங்களுக்கு உதவி என்று அறிவித்திருக்கிறது. இந்த புதிய கொள்கைக்கு இந்திய அரசு எதிர்ப்பு காட்டியுள்ளது. சேவை வரி புகழ் சிதம்பரம், ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி போன்றவை அவசியம் தான் ஆனால் இதனால் வளர்ச்சி தடை படும் என்று சொல்லியிருக்கிறார்.
(.... Moving on to the Agenda on Strengthening Bank Group engagement on Governance and Anticorruption, we agree that good governance and anticorruption are important, but we ought not to allow them to obscure or negate the overall development agenda. .... We urge the Bank to see Governance as one of the means for attainment of development objectives, and not as an end in itself).

அதாவது "ஊழல் எங்கள் பிறப்புரிமை , இதில் உலக வங்கி தலையிட வேண்டாம் " என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

Tuesday, September 05, 2006

கொள்கைக்கு அடிமையானால் ...

காலித் அஹ்மத் , இவர் பாகிஸ்தானில் ஒரு மூத்த ஜர்னலிஸ்ட். பாகிஸ்தானின் போக்கு பற்றிய அவரின் சமீபத்திய கட்டுரையிலிருந்து ஒரு துளி.

"அடிமைப்பட்ட மக்கள் சிறந்த படைப்பிலக்கியம் செய்வார்கள் என்று ஒரு கருத்து உண்டு . கொள்கைக்கு அடிமை ஆவதும் அடிமைத்தனம்தான். கொள்கைசார்ந்த ஆட்சியாலோ, தானாகவோ நடந்தால், கருத்து வறட்சி தான் எற்படும். தீவிர இசுலாமியக்கொள்கை நம் பெருமை வாய்ந்த உருது இலக்கியத்தை சிதைது விட்டது.தற்கால தீவிர கொள்கைவாத நாடுகளில் நல்ல இலக்கியம் வருவதில்லை. உலகமயமாக்கலும் ஒரு கொள்கையே , அதனை முழுமையாக எற்று நடைமுறைப்படுதும் நாடுகளில் தீவிர இலக்கியம் இல்லை."

Wednesday, August 30, 2006

பெரியார் சிலை "அவமரியாதை"

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி "அவமரியாதை" செய்த நபர்களை பிடித்து சட்டதின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தரப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். சட்டரீதியாக எப்படி வழக்கு நடைபெறும் என்று தெரியவில்லை . மாலை போட்டு சந்தனம் பூசி சூடம் ஏற்றி ஊதுவத்தி கொளுத்தி வழிபடுவது எப்படி desceration ஆகும்? கோர்ட் தான் சொல்லவேண்டும்

Wednesday, August 23, 2006

கொஞ்சம் சீரியஸ் மேட்டர்

பழங்காலத்தில் நிலதீர்வை பேரரசுகளயும் சாம்ராஜ்யங்களையும் நடத்த பொருள் தந்தது . இப்போது கிஸ்தி கட்டுவது அவ்வளவாக இல்லை , நிலத்தீர்வயும் அதிகம் இல்லை, இதற்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் சம்பந்தம் உண்டா ? என் மனதில் தொன்றிய எண்ணம், இந்த பதிவில்.

விவசாயிகள் தற்கொலை கடந்த சில ஆண்டுகளாக பரவலாக நடைபெற்று வருகிற ஒரு சமாச்சாரம் , இதற்கு மூல கரணம் ஆக சொல்லப்படுவது , விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைகவில்லை என்பதே, சந்தையில் விலை அப்போதய நிலவரதின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது , விலை நிர்ணயம் ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மயாக செய்யப்படுகிறதா என்பது வேறு விஷயம். சந்தை விலை பல சமயங்களில் அரசு சொல்லுல் குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட வெகு குறைவாகவே பெரும்பாலும் உள்ளது. அரசு தான் நிர்ணயித்த விலையை அமுல் செய்ய முடிவதில்லை அல்லது முயற்சிக்கவில்லை. அரசின் பாராமுகம் ஏன்?

இதற்கும் கிஸ்தி மேட்டருக்கும் என்ன சம்பந்தம் ?

ஒருவர் நமக்கு அனுசரணையாக இருக்க வேன்டுமென்றால் அவருக்கு 1) பிற்பாடு நமது தயவு தேவைப்பட வேண்டும் அல்லது 2) அவருக்கு நாம் ஏதாவது அளித்திருக்க வேண்டும்.

தற்போது சொற்ப தொகையே கிஸ்தியாக வசூலிக்கப்படுகிறது , அதுவும் பலமுறை வெள்ளம் வறட்சி என்று ஏதாவது சாக்கு சொல்லி வசூலிப்பதில்லை. கசப்பான உண்மை என்னவெனில் , எப்பேர்பட்ட ஜன நாயக அரசாக இருந்தாலும் , வரிகட்டாத நபர்களை இரண்டாம் தரக்குடிமக்களாகத்தான் நடத்தும். விவசாயிகள் கேட்கலாம், " நாங்கள் தானே களஞியத்தை ரொப்புகிறோம் !" என்று. உலகமயமாக்கலுக்குப் பிறகு அரசிற்கு தானியம் எங்கும் கிடைக்கும் . சமீபத்தில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தது நினைவிருக்கலாம்

ஆண்டுதோரும் பட்ஜட் போடும் சமயம் பெரும்தொழிலதிபர்களையும், பெரும் வணிகர்களையும் கூப்பிட்டு ஆலோசனை செய்யும் அரசு இதுவரை விவசாய ப்ரதிநிதிகளை கூப்பிட்டு ஆலோசனை செய்ததாக எனக்கு தெரியவில்லை.


இதற்கு காரணம் நம் விவசாயப்பெருமக்கள் அரசை சதாசர்வகாலமும் அண்டி நிற்பது தான். தலைவர்களும் கடன் தள்ளுபடி, மானியம். இலவச மின்சாரம், என்று கவர்ச்சியாக பேசிப்பேசி விவசாயியின் முதுகெலும்பை உடைக்கிறார்கள். மூவேந்தர் காலம் முதல் வெள்ளைக்காரன் காலம் வரை அரசுக்கு இறையளித்த விவசாயி இன்று திருவோடேந்தி நிற்கிறான்.


இந்த நிலை மாற முதலில் குறைந்தபட்சம் பெரிய விவசாயிகளாவது வருமானவரி அல்லத் சற்றூ பெரிய அளவில் கிஸ்தி கட்டவேண்டும், நாட்டில் 10 லட்சம் பெருவிவசாயிகளாவது நிச்சயம் இருப்பார்கள். ஆளுக்கு ரூ 10000 கட்டினாலும் 1000 கோடி வருகிறது. எந்த அரசும் இந்தப்பணத்டை வேண்டாம் என்று சொல்லாது.

பதிவு தொடரும்

Friday, August 18, 2006

அல்லக்கைகளிடமிருந்து தமிழ் மண் காக்க ஒரு யோசனை.

நெடு நாளைக்கு பிறகு அரசியல்.
கருணாநிதியும் அல்லக்கைகளும் தரிசு நிலம் பற்றி வாய்க்கு வ ந்தபடி அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கிராமங்களில் விஏஓ மற்றும் அல்லக்கை அரசு ஊழியர்கள் சிறு நில உரிமையாளர்களிடம் கட்டிங் வாங்கி நிலங்களை தரிசு இல்லை என்று எழுதி தருகிறார்கள்.
ஒரு யோசனை, நிலத்தை 1000,2000 ரூபாய்க்கு வங்கியில் அடைமானம் வைத்தால் பரோட்டாவால் கையக படுத்த முடியாது. புரட்சி தலைவி மீண்டும் வந்தவுடன் மீட்டுக்கொள்ளலாம்.

Friday, July 28, 2006

பழகு நான்மறை யின்பொரு ளாய்,
மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த,
எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே


இன்று திருவாடிப்பூரம் ஆதலால் இந்த பாசுரத்தை வலைப்பதிவாக வைத்தேன்

Tuesday, July 18, 2006


Numbskulls

The numbskulls that sit in our great government have done it again. After fooling around over the mumbai blasts they have discovered that justice can be rendered by blocking blogspot.

All security threats including my blog has been blocked by various service providers operating out of Secular Democratic Republic AKA Bananadesh of India.

They had blocked yahoo groups a few years ago.
Whew!!

People are smart and work arounds are already available.

Thursday, May 18, 2006


My prediction that the central govt. will be true to the congress culture and will appoint a commitee for quota issue has come true. The da vinci code will mostly be banned. NDTV et al will focus on the film. Quotas will be forgotten for now. Medicos will start attending classes.
Life is easy.

Marandi has left BJP it will affect both BJP and soren's party.

Tuesday, May 16, 2006

Hmm.. So many people have written so much abt Tamil Nadu elections. I am not going to tell anything on it.The quota issue is now in forefront. As usual the congress is playing to both galleries.The solution for this?We know the congress culture. There is an all weather solution.Appoint a commitee. Forget the issue. :-)

Monday, April 03, 2006

LFW is happening, biggest ever fashion event in our bananadesh. Farmers continue to kill themselves. Our Bourgeoisie is not interested in people dying, but over interested in what preity
zinta wears
Naxals meanwhile kidnap trains, mine villages, and kill villagers.
If they are genuine class warriors then they should be in LFW venue, giving pamplets to those heartless bourgeois inside. Or hold red flags outside.
What is CPIM's opinion on LFW by the way.
I am a bit disappointed that CPI ML the only indian party with accountability is not contesting from my constituency in TN, but has put up candidates somewhere else in North TN.
I have to settle for Amma this time as well.

What do i call myself ideologically? A vedic left winger?
Vaidika Vama!! or VamaDeva ;-)

Monday, February 27, 2006

Was thinking over all night yesterday, I fogot the name of the vedic celestial horse,
similar to unicorn, I then googled and found, It is tarkshya
as in , Swasti nastaarkshyo arishtanemih (YV , Tait Aran. 1-1)
It was so obvious and i missed it.
also is uchaishravas same as arishtanemih-tarkshya?

i also saw a page which says tarkshya was a rishi and not a horse :-)


If he is a rishi why havirbaagam is given to him? since for a rishi to get havirbagam he has to be a part of one's pithru vargam if my smartic position is correct theologically.

Also above the new chennai city centre mall they have kepr awinged lions, Any vedic name for it?

Friday, January 20, 2006

Interesting things happen in bengalooru, after Kumaranna moves to BJP camp with 40 odd MLA'sIf everything goes as per script and the assembly lasts full term we would have had a congress a
janat dal and a BJP government in the same assembly(!) , This would put the goan's and manipuri's
to shame. Now k'taka has far more aaya ram gaya ram politicians than goa + manipur +
haryana(aayaram janmabhoomi), Tamils can export ramadoss there so things become more interestng
there and less murkier in TN.

Monday, January 02, 2006

i enter the blogosphere on the second day of 2006, it has started in a good note for me , long time unresolved gate level issues got solved, as if by magic.
I think 2006 could be very interesting , lets see.