Sunday, November 05, 2017

மின்சிக்கனம் தரும் துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (BLDC Fans)

கடந்த சில வருடங்களாக, ஒளிதரும் குண்டு பல்புகள்,குழல் விளக்குகளை ஓரங்கட்டி குறைந்த அளவே மின்சாரம் தேவைப்படும் எல்ஈடி  விளக்குகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆது போலவே வீட்டு உபயாக மின் சாதனங்களில் அனைவராலும் அதிகமாக பயன் படுத்தப்படும் மின்விசிறிகளிலும் மின் சிக்கனம் தரும் வகையில் அறிமுகமாகியுள்ளது  துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (Brushless DC Fans)

இவ்வகை மோட்டார்கள் புதியதன்று பண்டையகால(!) ஃப்ளாப்பி டிஸ்க் படிக்கும் கருவியின் மோட்டார் இந்த வகையை சார்ந்ததே எனினும் சந்தயில் பயன் படுத்தக்கூடிய மின்விசிறியாக இந்த மோட்டர் சில ஆண்டுகளாகவே கிடைக்கிறது

ஒரு சாதாரண மின்விசிறிக்கு சுமார் 80W மின்சாரம் தேவை, ஆனால் BLDC மின்விசிறிக்கு 28W மின்சாரமே தேவை

ஒரு நாளில் சராசரியாக 12 மணிநேரம் ஓடும் சாதாரண மின்விசிறியால் ஆண்டுக்கு 350 யூனிட் மின்சாரம் செலவாகும், அதுவே BLDC மின்விசிறி 120 யூனிட் மின்சாரமே எடுத்துகொள்ளூம் என்பதால், யூனிட் ஒன்றிற்கு 6 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1400 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.


மோட்டார் 12V நேர் மின்னோட்டட்தில் ஓடுவதால் சில மாற்றங்கள் செய்து சூரிய சக்தி தகடுகளுடன் (Solar panel) நேரடியாக இணைக்கலாம். இல்லாவிடில் சாதாரண 230V AC இணைப்பிலும் ஓடும்.

அமேசான்,ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் 3000 ரூபாய் விலையிலிருந்து சாதாரண உள்ளூர் பிராண்ட் தயாரிப்பு கிடைக்கிறது



Surya,Havells போன்ற ப்ராண்ட் நிறுவனங்கள் 5000 ரூபாய் அளவில் விற்கின்றன. ஃபேன் 8 முதல் 10 ஆண்டுகள் வரும் ஐட்டம் என்பதால்  சேமிப்பை கணக்கிட்டால் அமவுண்ட் ஓகே தான்.





Friday, August 18, 2017

ஜரியா சுரங்கம்- நூறாண்டுகளாக எறியும் தீ

ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கியமான நிலக்கரி நகரம் தன்பாத். இந்திய நிலக்கரி தேவை பெருமளவு பூர்த்தியாகும் இடம். தன்பாத்தை சுற்றியுள்ள பகுதியில் பல நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன.

தன்பாதிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலுள்ள ஜரியா (Jharia) என்னும் ஊரில் மொத்தம் 9 சுரங்கங்கள் உள்ளன, அவற்றில் 7 திறந்த வெளி சுரங்கங்கள் (open cast), மற்ற இரண்டு மூடிய சுரங்கங்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்பட்டன, குத்தகைதாரர்கள் பிகாரின் பல பகுதிகளிலிருந்து கூலியாட்களை கொண்டுவந்து நிலக்கரி எடுத்தனர், எந்தவிதமான நவீன உபகரணங்களோ பாதுகாப்போ இல்லாமல் கிடைக்கும் இடங்களிலெல்லம் கரி தோண்டி எடுத்தனர்.

ஜரியாவில் கிடைக்கும் கரி கோகிங் கோல் எனப்படும் வகையை சேர்ந்தது , அதிக மாசற்ற, உயர் எரிநிலை கொண்ட கரியாகும்.

 நிலக்கரி சுரங்கங்கள் மின்னல், வெளிச்சத்திற்காக பந்தம் போன்றவைகளை பயன் படுத்துவது, கரிக்கற்கள் ஒன்றிடன் ஒன்று உராய்வது போன்ற காரணங்களால் தீப்பற்றிக்கொள்ளும், அப்படி 1916ம் ஆண்டில் ஒரு நாள் ஜரியாவில் தீப்பற்றியது, இன்று வரை அணைக்க  முடியவில்லை.
எரியும் சுரங்கத்திற்கிடையே  தொழிலாளர்கள், வியாபாரிகள் அவர்தம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள், அவ்வப்போது பூமியின் அடியில் உள்ள சில வாயுக்கள் வெப்பத்தில் வெடிக்கவும் செய்யும் , நிலம் உள்வாங்கவும் செய்யும்.  இது போன்ற நிகழ்வுகளில் உயிர் இழந்தவர்களும் காயமுற்றவர்களும் பலர் உண்டு


Image courtesy Counterview.org


1974 இந்த சுரங்கங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு பாரத் கோகிங் கோல் நிறுவனத்தின் கீழ் வந்தன, அப்போதும் தீயை அணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வி அடைந்தன.

பொதுவாக இது போன்ற பெரும் தீயை  திரவ நைட்ரஜன்  கொண்டு அணைக்கலாம். ஆனாலும் அந்த முறையும் பலன் கொடுக்கவில்லை.

இந்த தீயினால் இதுவரை சுமார்  12 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான நான்கு கோடி டன் கரி  எறிந்து வீணகியுள்ளது மேலும் பல லட்சம் கோடி மதிப்பிலான 200 கோடி டன் கரி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

உலகளவில் நிலக்கரி சுரங்கங்களில் சராசரியாக 1000ம் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எறிந்துகொண்டிருக்கிறது

தொடர்புடைய சுட்டிகள்
Fresh move to douse Jharia’s coal fires
Burning for over 100 years, Jharkhand’s underground fire affects 5 lakh people