Monday, June 02, 2008

குஜ்ஜார் போராட்டம் சில எண்ணங்கள்

குஜ்ஜார் போராட்டம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.ராஜஸ்தானின் மக்கள் தொகையில் 6-7 % வரை உள்ள இவர்களின் போராட்டம் மற்ற 90+% மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. மற்ற சமூக மக்களிடம் இதனுடைய எப்படி backlash இருக்கும் என்று குஜ்ஜார்கள் யோசித்ததாக தெரியவில்லை.

******

முக்கியமான மும்பை டில்லி FEDL ரயில் பாதையை ஆக்க்கிரமித்துள்ளதால் ராஜஸ்தானின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது வட இந்தியவே பெரும் பாதிப்புகுள்ளாகி இருக்கிறது

தலைக்குமேலே மின்சார கம்பியுடன் சேர்ந்த ரயில் பாதையை விட சில வெளி நாடுகளில் உள்ளது போல் மூன்றாம் ரயில் (Third rail system) எனப்படும் மின்சார தண்டவாளங்களை அமைப்பதின் மூலம் ரயில் மறியல் தமாஷ்களை ஒழிக்க முடியும்.


*******

ராஜஸ்தான் அரசு ஒரு தவறு செய்துவிட்டது. சென்ற வருடம் இதே கோஷ்டி இதே போன்றதொரு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்திய ஆட்சி முறையில் நிரந்தர தீர்வான 'கமிட்டி' அமைப்பதன் மூலம் அப்போதைக்கு அமைதி திரும்பியது. அதே சூட்டோடு இந்த குஜ்ஜார் போராட்ட குழுவை உடைத்திருக்க வேண்டும். குஜ்ஜார்கள் சில பல பிரிவுகளாக இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்ப்பட்டிருக்காது.

வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் அருமையான நிர்வாக நடைமுறையை நம்முடைய அரசுகள் விடலாகாது

*******

உண்ணாவிரதம் இருப்பது, மனு கொடுப்பது, போன்ற போராட்ட வடிவங்களுக்கு இப்போது அரசு எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. ஆர்ப்பாட்டம், சாலை மறியல், வன்முறை, கலவரம், துப்பக்கி சூடு இவ்வளவும் நடந்தால் தான் என்ன என்றே திரும்பிப்பார்க்கிறார்கள்.

*******
இவ்வளவு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போராடம் ஒருவேளை வெற்றி பெற்றால், இவர்களில் சில நூறு பேருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.