Sunday, June 05, 2011

மெட்ரோவா மோனோவா?

மெட்ரோவா மோனோவா என்றால் நான் சந்தேகத்திற்கிடமின்றி மோனோ கட்சி. வெகு சீக்கிரம் கட்டுமானம் முடிந்து போக்குவரத்தை துவக்க சிறந்த முறை மோனோரயில். ரயில் பாதைகல்ள் போலல்லாமல் மோனோ ரயில் ட்ராம் போன்ற போக்குவரத்தை சேர்ந்தது என்பதால் மாநில அரசே பல முடிவுகளை எடுக்கலாம். Serendipity யோ என்னவோ , கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த மோனோரயில் பற்றிய கட்டுரை கவனத்தை கவருகிறது.


***
பல கோடிகளைக் கொட்டி இன்னும் நிறைவு பெறாமலிருக்கும் MRTS திட்டத்தை இங்கு நினைவு கூறுவது அவசியம். ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து கிலோமீட்டர் என்னும் ரீதியில் நத்தை வேகத்தில் நடந்து வரும் திட்டம் இது. சென்னை நகரில் உள்ள போக்குவரத்து சூழ்நிலைகள், இங்குள்ள பேருந்து கட்டணம், கடைசி மைல் இணைப்புகள் போன்ற தகவல்களை உள்வாங்காமல் தில்லியில் இருந்து ஒரு திட்டத்தை செயல் படுத்தினால் என்னவாகும் என்பதற்கு MRTS ஒரு சாட்சி.
இந்தியில் எடுத்து , தமிழில் டப் செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் மத்திய அரசின் த்ராபை விளம்பரங்களைப் போல MRTS காட்சியளிக்கிறது.


***
பெரியவருக்கு பிகில் ஊதப்பட்டதிலிருந்து இந்த நிதி அந்த நிதி என்று எந்த சானலிலும் விளம்பரங்கள் இல்லாததால் பேரன்மாரின் உபத்திரவமின்றி டி வி பார்க்க முடிகிறது.

***
அடையாரின் மெர்சி எலெச்ட்ரானிக்ஸ் எனக்கு பத்து வருடங்களாக பரிச்சயம். அங்கு விற்க்கப்படும் அனைத்துமே டுபாக்கூர் என்று நண்பர்கள் பலர் கூறினாலும் நான் வாங்கிய எந்தப்பொருளும் வீண்போனதில்லை. பெரும்பாலும் டூப்பிளிகேட் சரக்கையே விற்கும் மெர்சிக்கு போட்டியாக மென்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் வேளச்சேரியில் ஒரு கடை. டூப்பிளிகேட்டுக்கே டூப்பிளிகேட்டா, என்ன கொடுமை சார் இது.