Friday, September 28, 2007

பர்மாவை அனைவரும் கும்மக் காரணம் என்ன?

புத்தபிட்சுக்களின் போராட்டத்தின் விளைவாக இன்று மியன்மர் நாடு (பர்மா) உலக மீடியாவிற்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு பர்மீய இராணுவ ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இப்படி அனைவரும் பர்மாவை கும்மு கும்மு என்று கும்மக் காரணம்?

அது ஒன்று மட்டும் தான் சர்வாதிகார நாடா? இல்லையே.

உலகிலுள்ள சர்வாதிகார நாடுகளின் பட்டியலைப் போடுங்கள். அவற்றில் பெரும்பான்மையானவை ஆப்பிரிக்க நாடுகள்.

இவர்களை எதிர்த்தால் நிறவெறியன் என்ற பட்டம் வந்து சேரும்.

மீதம் இருக்கும் சர்வாதிகார நாடுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் நாடுகள். எந்த முற்போக்குவாதியாவது முஸ்லிம் நாடுகளை எதிர்ப்பானா?.

இவற்றை தள்ளிப் பார்த்தால் ஆறு கம்யூனிச சர்வாதிகார நாடுகள் இருக்கின்றன. அவையும் முற்போக்குவாதிகள் எதிர்க்கத்தக்கவை அல்ல.

எஞ்சி நிற்பது பர்மா மட்டுமே. அதனால்தான் அனைவரும் வெளுத்து வாங்குகிறர்கள்.

On Myanmar we can be both democratic and politically correct. Hurray!!

5 comments:

Nirek said...

nalla reasoning da!

கானகம் said...

Kishore.. very correct view..

Oilfull Middle east == No chance to fight. Moreover all the countries are under the colonies of US or UK.

Communist countries will say Mind your Business..

African countries will say Ayyo ayyo...

So, Burma.. Your last line is a real Punch..

Good. Keep it up Kishore. Will you consider to change your photo..??? Looks like a college ID card Photo=::)

Jayakumar, Doha, Qatar

மு. மயூரன் said...

மியான்மார் அதிகளவான எண்ணெய் வளத்தையும் பசுமையான நிலங்களையும், நிறைந்த நன்னீரையும் பெரும் தொழிலாளர் கூட்டத்தையும் கொண்டிருக்கிறது.

இத்தனையையும் கொண்டிருக்கும் மியான்மார் நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரும் தவறுகளில் தலையாயது என்ன தெரியுமா/

இந்த வளங்களை எல்லாம் அமெரிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத்தக்கவாறு திறந்துவிடாமலிருப்பது.
எண்ணெய்க்கிணறுகளையும், வளமான நிலங்களையும் அரசு தன்வசம் வைத்துக்கொண்டிருப்பது நியாயமா/

அதை புஷ் போன்ற பெரும் மீட்பர்களின் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பதல்லவா முறை?

அதை செய்யாவிட்டால் எப்படி அந்த நாட்டை மன்னிப்பது,.
அத்தோடு பாருங்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களின் மூடத்தனத்தை, தண்ணீரை இன்னும் இலவசமாக மக்களுக்கு விட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவே தனது நதிகளை பன்னாட்டுக் ம்பனிகளுக்கு விற்கும் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்போது, நதி நீரை இப்படி இலவசமாக விவசாயத்துக்கு வழங்கலாமா?

என்ன கொடுமை?

இந்த ராணுவ ஆட்சி தூக்கியெறியப்படத்தானே வேண்டும்?

இல்லாவிட்டால் எப்படி பன்னாட்டு நிறுவங்களும் அமெரிக்காவும் இந்த நாட்டின் வளங்களை உறிஞ்சிக் கொழுப்பது?

நீங்களே சொல்லுங்க பாப்பம்?

--

ஆனால் இந்த இராணுவ ஆட்சி ஒன்றும் யோக்கியமானதல்ல. இதை தூக்கியெறியத்தான் வேண்டும்.

ஆனால் இப்போ நடக்கும் கூத்துக்கள் அமெரிக்க சார்பானவை, அமெரிக்காவுக்கு சாய்வான ஐ. நா வுக்கு சாதகமானவை.

பத்மகிஷோர் said...

மறுமொழியிட்ட நிரேக், ஜேகே மற்றும் மயூரன் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

good post dude :P