ISBயின் வெற்றியும் அரசின் தோல்வியும்
லண்டன் ஃபைனன்ஸியல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தர வரிசையில் உலகின் முதல் 20 இடங்களுக்குள் இந்தியன் ஸ்கூல் அஃப் பிசினஸின் MBA டிகிரி இடம்பெற்றுள்ளது. நல்ல செய்தி என்றலும் தில் ஒரு நகை முரண் உள்ளது. என்னவென்றல், ISB யின் MBA டிகிரி AICTE ஒப்புதலை இதுவரை பெறவில்லை.
சட்ட ரீதியாக பார்க்கையில் நாட்டில் செயல்படும் பல டுபாக்கூர் கல்வி நிறுவனங்களும் ISBயும் ஒன்றுதான். ISBயோ எங்களுக்கு AICTE/UGCயின் முத்திரை தேவையில்லை என்று கூறுகிறது.
இது எவ்வாறு சாத்தியமானது?
NIIT, இதற்கு அதிக அறிமுகம் தேவையில்லை, எப்படி எந்த அரசு சான்றிதழும் பெறாமல் தரமான கல்வி அளிக்கிறதோ அப்படித்தான். தொடர்ந்து நற்பெயரை தக்க வைத்துக்கொண்டாதே NIITக்கு போதுமானதாக இருந்தது.
ISB கெல்லாக், வர்ட்டன் மற்றும் லண்டன் மேலாண்மை கல்விச்சாலைகளுடனான ஒப்பந்தங்கள் மற்றும் முதல்தர ஆசிரியர்களின் உதவியால் AICTE யுடன் இணையாமலேயெ நல்ல கல்வியை அளிக்க முடிகிறது. இப்போது மேலாண்மை கல்விச்சாலைகளின் சர்வதேச சங்கமான AACSBயுடன் சேர முயற்சிக்கிறது.
படத்திட்டம்,கட்டணம், சேர்க்கை, போதனை, ஹாஸ்டல் உணவு, செல்போன் கொண்டுவரலாமா, என்று எல்லாவற்றையும் அரசு தான் கட்டுபடுத்த வெண்டும் என்று குதிப்பவர்கள் ISB மற்றும் , தேசிய ஹோட்டல் தொழில் கூட்டமைப்பு நடத்தும் ஹோட்டல் மேலாண்மை கல்வித்திட்டதியும் (இதற்கும் 'அரசு அனுமதி' கிடையாது) பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் தலையங்கம்
4 comments:
ISB போலவே ICFAI போன்றவையும் அங்கீகாரம் பெறாதவை. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிலிருந்து பட்டம் பெறும் மாணவர்களுக்கு அரசு நேரடியாக வேலை கொடுக்காது. அவ்வளவுதான். தனியார் துறையில் மட்டுமல்ல, அரசுத்துறை கார்பொரேட் நிறுவனங்கள் சில ICFAI பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.
எனவே நாம் இதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். வரும் நாள்களில் பல்வேறு அரசு அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் உருவாகும். இவற்றில் சில் மிகவும் உயர்தரமான கல்வியைக் கொடுக்கும். ஆனால் பல, மோசமான கல்வியைக் கொடுத்து, பணத்தை மக்களிடமிருந்து உருவும்.
மாணவர்கள்தாம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அரசால் இனியும் உயர்கல்வியை ஒழுங்காகக் கட்டுப்படுத்தமுடியாது என்றே தோன்றுகிறது.
ICFAI தவிர IIPM மும் பேப்பர்களில் கண்றாவி விளம்பரங்களை போட்டு வருகிறது. அவர்கள் தரும் கல்வியின் தரம் என்னவென்று தெரியவில்லை.
//இனியும் உயர்கல்வியை ஒழுங்காகக் கட்டுப்படுத்தமுடியாது என்றே தோன்றுகிறது//
அரசின் கட்டுப்பாட்டிலிருந்து உயர்கல்வியும் நழுவுமனால் (மெட்ரிக் பள்ளிகளால் ஆரம்பக்கல்வி ஏற்க்கெனவே நழுவி விட்டது) இட ஒதுக்கீடு மற்றும் இன்ன பிற அரசு திட்டங்களின் எதிர்காலமென்ன?
IIPM நிஜமாகவே கண்றாவிதான். ஆனால் ICFAI பற்றி அப்படிச் சொல்லமுடியாது என்று நினைக்கிறேன்.
கல்வி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவுவதைத் தடுக்கமுடியாது. தனியார் உயர் கல்வி இடங்களில் இட ஒதுக்கீடு ஒரு பிரச்னையாக இருக்காது என்றே நினைக்கிறேன். NIIT போன்று இந்தக் கல்வி நிலையங்கள் அனைத்தும் வேண்டிய இடங்களை உருவாக்கும். NIIT-ல் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை ஏதேனும் இருந்துள்ளதா? இல்லை அல்லவா? இடங்கள் பற்றாக்குறையாக இருந்தால்தானே இட ஒதுக்கீடு?
ஆனால் கல்விக்கு ஆகும் செலவு ஒரு பிரச்னையாக இருக்கும். அதற்கு அரசு வவுச்சர் முறை மூலம் பின்தங்கிய வகுப்பினருக்கு உதவிசெய்ய வேண்டிவரும்.
Good Article Padmakishore.
Post a Comment