Monday, June 02, 2008

குஜ்ஜார் போராட்டம் சில எண்ணங்கள்

குஜ்ஜார் போராட்டம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.ராஜஸ்தானின் மக்கள் தொகையில் 6-7 % வரை உள்ள இவர்களின் போராட்டம் மற்ற 90+% மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. மற்ற சமூக மக்களிடம் இதனுடைய எப்படி backlash இருக்கும் என்று குஜ்ஜார்கள் யோசித்ததாக தெரியவில்லை.

******

முக்கியமான மும்பை டில்லி FEDL ரயில் பாதையை ஆக்க்கிரமித்துள்ளதால் ராஜஸ்தானின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது வட இந்தியவே பெரும் பாதிப்புகுள்ளாகி இருக்கிறது

தலைக்குமேலே மின்சார கம்பியுடன் சேர்ந்த ரயில் பாதையை விட சில வெளி நாடுகளில் உள்ளது போல் மூன்றாம் ரயில் (Third rail system) எனப்படும் மின்சார தண்டவாளங்களை அமைப்பதின் மூலம் ரயில் மறியல் தமாஷ்களை ஒழிக்க முடியும்.


*******

ராஜஸ்தான் அரசு ஒரு தவறு செய்துவிட்டது. சென்ற வருடம் இதே கோஷ்டி இதே போன்றதொரு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்திய ஆட்சி முறையில் நிரந்தர தீர்வான 'கமிட்டி' அமைப்பதன் மூலம் அப்போதைக்கு அமைதி திரும்பியது. அதே சூட்டோடு இந்த குஜ்ஜார் போராட்ட குழுவை உடைத்திருக்க வேண்டும். குஜ்ஜார்கள் சில பல பிரிவுகளாக இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்ப்பட்டிருக்காது.

வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் அருமையான நிர்வாக நடைமுறையை நம்முடைய அரசுகள் விடலாகாது

*******

உண்ணாவிரதம் இருப்பது, மனு கொடுப்பது, போன்ற போராட்ட வடிவங்களுக்கு இப்போது அரசு எந்த மரியாதையையும் கொடுப்பதில்லை. ஆர்ப்பாட்டம், சாலை மறியல், வன்முறை, கலவரம், துப்பக்கி சூடு இவ்வளவும் நடந்தால் தான் என்ன என்றே திரும்பிப்பார்க்கிறார்கள்.

*******
இவ்வளவு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து போராடம் ஒருவேளை வெற்றி பெற்றால், இவர்களில் சில நூறு பேருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.

5 comments:

நண்பன் said...

// வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் அருமையான நிர்வாக நடைமுறையை நம்முடைய அரசுகள் விடலாகாது //

What a great thought!!!

The British had never left this country. Still they are here, trying to enslave the poor Indians, through people like you!

You can never think of a just way to meet the challenges!!!

பத்மகிஷோர் said...

அய்யா, சங்கம், கட்சி போன்றவற்றை உடைப்பது நம் நாட்டில் நடக்காததா.

இப்போதைய சூழ்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு இருப்பதி இரண்டே இரண்டு சாய்ஸ். ஒன்று திரு. பைன்ஸ்லாவிடம் சரணடைவது. இரண்டு அவரை ஓரம்கட்டுவது.

Other options have more or less run out.

Santhosh said...

அவங்க அவங்களுடைய வாழ்வாதார பிரச்சனைக்காக போராடிகிட்டு இருக்காங்க.. உங்களைப்போன்ற அடிமை புத்தி உடையவர்களுக்கு இதெல்லாம் புரியாது.. நண்பன் சரியாதான் சொல்லியிருக்காரு.. அரைவேக்காடுதனமா உளருவதை நிறுத்துங்க.

பத்மகிஷோர் said...

சந்தோஷ். இவர்களுடைய போராட்டம் உடனடியாக முடிவுக்கு வரக்கூடியது அல்ல. இவர்களின் கோரிக்கை நிறைவேறுவதும் கடினம் (பார்க்க சோப்ரா கமிட்டி பரிந்துரைகள்)
இவர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டுமே அன்றி சாதாரண மக்கள் பயன் படுத்தும் சாலை ரெயில் பாதை போன்றவற்றை வாரக்கணக்கில் மறிக்கக் கூடாது என்பது என் எண்ணம்.
இவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் போராட்டமுறை விமர்சனத்திற்குரியதே.

சென்ற வருடமும் இதே போல போராடினர். இறுதியாக , 'கமிட்டி அமைப்பது' என்கிற ஒரு மொக்கை முடிவிற்கு சரண்டர் ஆனார்கள்.

இந்த முறையும் அப்படி ஒரு சரண்டரை திரு. பெயின்ஸ்லா நிகழ்த்தினாலும் நிகழ்த்துவார். யார் கண்டது.

JKR said...

//இவர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டுமே அன்றி சாதாரண மக்கள் பயன் படுத்தும் சாலை ரெயில் பாதை போன்றவற்றை வாரக்கணக்கில் மறிக்கக் கூடாது என்பது என் எண்ணம்.//

உங்களது கருத்தில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அரசிடம் கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி போராடும் அவர்கள் தங்கள் போராட்டத்தால் பாதிக்கப் படுவது தங்களைப் போன்ற பொது மக்களே என்பதை உணர மறுக்கிறார்கள்