சங்கீத சீசன் சந்தேகம்
சங்கீத சீசன் துவங்கப்போகிறது,
'தமிழில் ஏன் பாடுவதில்லை' போன்ற கேள்விகள் இந்த வருஷமும் வரும். வரட்டும்.
நான் சொல்ல வந்த விஷயமே வேறு.
சில சபாக்கள்ளிலும் டிவி யில் வரும் மார்கழி மாச ஸ்பெசல் இசை நிகழ்ச்சிகளிலும் இரண்டு பாட்டுக்கு நடுவே ஆடியன்ஸ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் சடங்கு நடைபெறும்.
நான் 3 - 4 வருஷமாக பார்க்கிறேன், ஆண் இசை வல்லுனர்கள் தமிழில் கேட்க்கப்படும் கேள்விக்கு தமிழில் பதில் அளிப்பார்கள். பெண்பாடகிகளிடம் தமிழில் கேள்வி கேட்டாலும் பீட்டர் பாஷையில் "திஸ் ராகா இஸ்" என்று ஆரம்ப்பித்து ஜல்லியடிப்பார்கள். சில விதிவிலக்குகள் உண்டு ( அருணா சய்ராம் சௌம்யா இருவரும் நல்ல தமிழில் பதில் அளிப்பார்கள்). முன்பு சுப்புடு அவர்கள் ஒரு பெண் கலைஞரை "அவர் ஏப்பம் கூட ஆங்கிலத்தில் தான் விடுவார்" என்று குறிப்பிட்டார்.
பொதுவாக, பெண் பாடகிகளுக்கு இப்படி ஒரு ஆங்கில மோகம் ஏன்?
6 comments:
I don't agree with you for someone using English for replying questions. Language is a communication medium, people can use whatever medium they are comfortable with to reply for questions.
I am more comfortable in speaking in English than Tamil. That does not mean I am trying to show off dude! It's comfort level.
why this language chauvinism is more prominent in TamilNadu? crazy yaar, get out of this shell, pls!
உருப்படியாக 4 வாக்கியம் தமிழில் பதில் சொல்ல முடியாதவர்கள், 'கீர்த்தனைகளை அனுபவித்து பாடுகிறோம்' என்று ஜல்லியடிப்பது ஏன்?
நிகழ்ச்சி நடப்பது சென்னையில், காட்டப்படுவது தமிழ் TV யில், பார்ப்பவர்கள் தமிழர்கள். கேள்வி கேட்க்கப்படுவது தமிழில் , அந்த அறிவு வேண்டாமா?
FM மிலும் இப்படி ஒரு நபர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பதில் சொல்ல, சுசித்ரா 'கடுப்பாகி நாங்கள் தமிழ் FM நடத்துகிறோம்' என்று ஒருமுறை கலாய்த்தார்.
தெரியாத மொழியில் பேச யாரும் வர்புறுத்த மாட்டார்கள் . இருந்தாலும், பல ஆண்டுகளாக பாடுபவர்கள் அவர்களின் ரசிகர்களின் மொழியில் பதிலளிக்காதது வருந்தக்கதே. ஒரு மாததுக்கு பேச்சுபயிற்சி எடுதால் முடிந்தது பிரச்சனை. கார் ஓட்ட கற்றுக்கொள்வது போல தமிழ் பேச கற்றுக்கொள்ளலாமே.
Its a most unfortunate thing that we have to know about our culture and music through a foreign language and in worst cases through foreigners.
நான் பெங்களுர் வந்து ஒரு மாதம் தான் ஆகிறது, நான் வந்த போது என் கன்னட அறிவு பூஜ்ஜியம். இருந்தாலும் இப்போது எழுத்துக்கூட்டியாவது கன்னடம் படிப்பேன். காரணம் இந்த மண்ணின் மாண்பை நான் மதிக்கிறேன்.
நிரேக் சொல்ல வந்தது, ப்ளாகர் சொதப்பியதால் cut & paste செய்யப்படுகிறது
Nirek has left a new comment on your post "சங்கீத சீசன் சந்தேகம்":
I accept he/she could have maximized the reach of their talk by using Tamil. But if they are not comfortable in speaking Tamil, why to pester them in speaking in Tamil?
Basically, they are artists. If you have some grudges on their art, that can be appreciated. Just becos they become celebrity doesn't mean that they shd oblige to all language chauvinists!
I dont know why Suchi said like that. If you see technically, she dont speak tamil. She speaks in some language which has tamil words also. But thats her comfort level. I have no grudges.
நல்ல கருத்துதான்...
அவர்கள் பாட கற்றுக்கொள்வது சினிமா துறையில் நுழையவே என்பது என் தாழ்மையான கருத்து...
மெட்ரிக்குலேஷனில் ஹிந்தியை முதல்பாடமாக எடுத்து படித்த இவர்களிடம் தமிழை எதிர்பார்ப்பதே அநாவசியம்...
kannadam padikka theriyumma! Kalakals da! Like that!
Post a Comment