Thursday, May 24, 2007

விஜயகாந்தின் காமெடி

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவு செய்யவில்லை' என்று விஜயகந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அவரிடம் இருப்பது ஒரே ஒரு ஓட்டு அதனை யாருக்கு போட்டால் என்ன , இல்லை போடாவிட்டால் தான் என்ன! ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுபவர்கள் வரிசையில் நின்று இவர்டம் ஆதரவு கேட்பது போலவும் , இவர் யோசித்து சொல்கிறேன் என்பது போலவும் பில்டப் கொடுப்பது , டூ மச்.


சினிமாவில் தனியொரு ஆளாக காஷ்மீர் வரை சென்று, பஞ்ச் டயலாக் பேசியபடியே பயங்கரவாதிகளை பந்தாடுவது மாதிரி ஜனாதிபதி தேர்தலையும் நினைத்துவிட்டார் போல.

ஒரு கதை நியாபகம் வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்..

பிச்சை 1 : இந்த வருஷம் எப்படியாவது திருமலை நாயக்கர் மஹாலை வாங்கிடுவேன்.

பிச்சை 2 : உன்னால் முடியாது, நான் விற்பதாக இல்லை.

"ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? " என்கிற அபத்த கேள்வியை பேட்டியில் விஜயகாந்திடம் கேட்ட நிருபரை கண்டு காலில் விழுந்து வணங்க வேண்டும்.

10 comments:

Anonymous said...

உங்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.
விஜயகாந்த்திடமும் கேட்கவேண்டும் என்று அந்த நிருபருக்கு தோன்றியதே, விஜயகாந்துக்கு வெற்றி தான்.

பத்மகிஷோர் said...

நல்ல வேளை ,அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவுனு கேக்காமல் விட்டாரே,


ஐநா சபை தேர்தலுக்கு முன்னால், சசி தரூர் விஜயகந்தை பார்த்திருந்தால் ஜெயித்திருக்கலாமோ என்னவோ.

அனானி, நான் ஒன்று விஜயகாந்தை வெறி கொண்டு எதிர்க்கும் 'கொள்கை குன்று' எல்லாம் இல்லை.

Anonymous said...

I read one article sometime back; wherein it was mentioned that one vote (Vijayakanth's vote) will decide the 5th MP seat for DMK or AIADMK. Therefore the reporter would have asked this question.


Srinivas from Dubai

Anonymous said...

விஜயகாந்தை காமெடி கிங்காக பார்த்த காலம் மலையேறி,

அரசியல்'வியாதிகளுக்கு ஒரு முடிவுரையாக, நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கும் காலம் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது...

ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்...

இட்லிவடையாரை கேட்டுப்பாருங்கள், அவர் கேப்டனுக்கு கொ.ப.செ வாக ஜாய்ண் பண்ணி மாசக்கணக்காச்சு...!!!

பத்மகிஷோர் said...

Yes, The question about rajya sabha is a relevent one.

But the one about presidential election and the reply .... difficult to stomach.

PRABHU RAJADURAI said...

"பிச்சை 1 : இந்த வருஷம் எப்படியாவது திருமலை நாயக்கர் மஹாலை வாங்கிடுவேன்"

If wishes are horses beggers would ride on it :-))

Nirek said...

:) vijayakant thinks too much abt himself da.
hope he dont step into shoes of polical comedian like subramnaya swami and manishankar iyer

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் என்ன தான் சொல்லுங்கள்; விஜயகாந்த் அரசியலில் சிறு சலசலப்பைத் தனிமனிதனாக ஏற்படுத்திவிட்டார். கட்டிட இடிப்பு, அதற்குச் சான்று அவரை பணபலம் அற்றவராக ஆக்கும் முயற்சியே அது.
சோ கூட அம்மா..கப்டனுடன் கூட்டுச் சேருவது; அடுத்த வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் எனக் கூறுகிறார்.
எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Anonymous said...

I dont think something wrong in this. And you should remember, George Fernandez met Vijayakanth at his chennai residence before presidential election.

பத்மகிஷோர் said...

இந்தப்பதிவை நான் எழுதியது வேட்புமனு தாக்கல் நடப்பதற்கு முன்னால்! பிறகு தான் ஜார்ஜ் ஃபெர்னான்டெஸ் வந்து பார்த்தார்.

அவருடைய ஒரு ஓட்டு என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது?