Friday, November 16, 2007

கர்நாடகம் காட்டும் வழி!!

கர்நாடகா மாநிலத்தில் 2004 ல் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பாஜக முதலிடத்திலும் காங்கிரஸ் இரண்டாவதாகவும் தேவகவுடாவின் ஜத(எஸ்) மூண்றாவதகவும் வந்தன.

ஏதேனும் இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை. முதல் இருபது மாதங்கள் , காங்கிரஸின் தரம் சிங் முதல்வராக இருந்தார், அவரை கவிழ்த்து பின்னர் குமாரசாமி ஜதவின் சார்பில் ஆட்சியை பிடித்தார்.

இப்போது பா.ஜ வின் எடியூரப்பா விடம் ஆட்சி வந்துள்ளது.

ஆக ஒரே சட்ட சபையை வைத்துக்கொண்டு 20 மாத காங்கிரஸ் ஆட்சி, 20 மாத ஜத(எஸ்) ஆட்சி, 20 மாத பா.ஜ ஆட்சி என்று சரிசமமாக ஆட்சி பகிரப்பட்டுள்ளது.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு நன்மையும் உள்ளது. வெறும் 20 மாதங்களே ஆட்சி நடப்பதால் எந்த ஒரு தொலைனோக்குத் திட்டதையும் செயல் படுத்தமுடியாது. இதன்மூலம் பல சீரழிவுகள் தடுக்கப்படும்.


28% ஓட்டு வாங்கி விட்டு ஒரே கட்சி 5 ஆண்டுகள் குப்பை கொட்டுவதை விட இது தேவலை.


நம்முடைய தேர்தல் முறை வாங்கும் ஓட்டின் அளவிற்கேற்ப ஆட்சியை பகிர்ந்துகொள்ளும் விகிதாச்சார முறையில் இல்லை என்றாலும் , கர்நாடகத்தில் நடந்த இந்த அரசியல் விபத்தின் மூலம் எதிர்காலத்தில், பாராளுமன்ற முறையிலேயே விகிதாச்சார முறையையும் உள்வைத்து விடமுடியும் என்று புலனாகிறது.

இதனை வெளிக்கொணர்ந்த கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு என் நன்றிகள்.

-----
இப்படி எழுதிய 48 மணி நேரத்தில் ஆட்சி கவிழ்ந்து விட்டது. என் கணிப்பை பொய்யாக்கிய கர்நாடக அரசியல் மேதை தேவேகவுடருக்கு நன்றி.

Tuesday, November 06, 2007

படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் இராணுவம்


பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தை தலிபான் கைப்பற்றியுள்ளனர். எதிர்த்து நின்ற பாகிஸ்தானிய துருப்புக்களை கைது செய்து ஒவ்வொரு சிப்பாயிடமும் ௫. 500 கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.



மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் பரந்த பாகிஸ்தான் கொடிகளை இறக்கி தலிபான் கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.


இதுவரை தன்னாட்சி பெற்ற பழங்குடிப் பகுதிகளிலேயே இருந்து வந்த தலிபான் ஆதிக்கம் இப்போது பாகிஸ்தானின் ஒரு முழு மாவட்டத்தையும் தன் கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது.


மூன்று போலிஸ் நிலையங்களை கடந்த இரண்டு நாட்களில் கைப்பற்றியுள்ளனர். சுற்றுலா நகரமான ஸ்வாட்டில் சுமார் 500 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. 50000 மக்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.
முஷாரப் அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.