படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தை தலிபான் கைப்பற்றியுள்ளனர். எதிர்த்து நின்ற பாகிஸ்தானிய துருப்புக்களை கைது செய்து ஒவ்வொரு சிப்பாயிடமும் ௫. 500 கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
மாவட்டத்தின் அரசு அலுவலகங்களில் பரந்த பாகிஸ்தான் கொடிகளை இறக்கி தலிபான் கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதுவரை தன்னாட்சி பெற்ற பழங்குடிப் பகுதிகளிலேயே இருந்து வந்த தலிபான் ஆதிக்கம் இப்போது பாகிஸ்தானின் ஒரு முழு மாவட்டத்தையும் தன் கைக்குள் கொண்டு வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
மூன்று போலிஸ் நிலையங்களை கடந்த இரண்டு நாட்களில் கைப்பற்றியுள்ளனர். சுற்றுலா நகரமான ஸ்வாட்டில் சுமார் 500 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. 50000 மக்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.
முஷாரப் அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.
முஷாரப் அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.
1 comment:
//எதிர்த்து நின்ற பாகிஸ்தானிய துருப்புக்களை கைது செய்து ஒவ்வொரு சிப்பாயிடமும் ௫. 500 கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்//
இதற்குப் பெயர்தான் நீ பிறருக்கு தீர்க்கின்ற தீர்ப்பின்படியே உனக்கும் தீர்க்கப்படும் என்பதா??
//முஷாரப் அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.//
அடுத்து அரசியல் கட்சிகள் பதவி ஏற்றாலும் தாலிபானை ஒன்றும் செய்யமுடியாது என்பதே எனது அபிப்பிராயம். பார்க்கலாம்..
Post a Comment