Monday, August 11, 2008

ரஷ்யா ஜார்ஜியா போர்- இந்திய அரசு அதிரடி முடிவு!!

கடந்த சில நாட்களாக ரஷ்யா ஜார்ஜியா நாடுகளுக்கிடையே தென் ஓஷேஷிய பகுதி தொடர்பாக போர் நடப்பது தெரியும்.

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டேன், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுரவுத்துறை எந்த கருத்தையுமே சொல்லவில்லையே ஏன்?

சில வருடங்களுக்கு முன்பு உலகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் பஞ்ச் டயலாக் சொல்லும் க.கந்தசாமியாக விளங்கிய இந்திய வெளியுரவுத்துறை இப்போதெல்லாம் மவுனம் சாதிக்கிறது, இல்லையென்றால் 'பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்' என்பது போன்ற வழவழா கருத்தை சொல்லுகிறது.

நம்மால் ஒன்று கையால் ஆகாது பிறகு வாய்ச்சவடால் மட்டும் எதற்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்களோ? உண்மை அதுவெனில் மிக்க மகிழ்ச்சி.

'நம்ம வழியை நாம பாத்துப்போம் , நமக்கு என் ஊர் நாட்டமை' என்று நினைத்தால் நாட்டிற்கு நல்லது.

2 comments:

Anonymous said...

Very good argument. You are right.

ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்.

http://kalaiy.blogspot.com

Kalaiyarasan said...

மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.


விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"