Monday, September 01, 2008

மின் காந்த அடுப்பு (Induction Stove)


சமீப காலங்களாக , வட்டார பத்திரிக்கைகள்,மின்சார ரயிலிலும் , மாநகர பேருந்துகளிலும் ஒட்டப்படும் விளாம்பரஙள் ஆகியவற்றில் வியாபித்திருப்பது மின்காந்த அடுப்புதான் (Induction Stove).


AC மின்சாரத்தின் நடுவே காந்த உணர்ச்சிக்கு உள்ளாகும் இரும்பு போன்ற உலோகங்களை வைப்பதால் உருவாகும் எட்டி கரண்ட் மூலம் உணவுப்பண்டங்களை சூடாக்குகிறது.
இந்த அடுப்பில் இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை (Ferro or ferri magnetic)மட்டுமே வைத்து சமைக்க இயலும்.

குறைந்த அளவு மின்சார செலவில் (ஒரு மணிநேரத்திற்கு முக்கால் யூனிட்) சமையல் செய்யலாம். மின்குக்கர், மைக்ரோவேவ் போன்று மூடிய நிலையில் இல்லாமல் , திறந்த அடுப்பு என்பதால் நம்மூர் சமையலுக்கு மிகவும் ஏற்றது.

1700 முதல் 3500 ரூபாய் வரை பல வித வடிவங்களில் கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சில கடைகளிலிலும், பொருட்காட்சிகளிலும் மட்டுமே காணப்பட்டாலும் இன்று பெரும்பாலான பாத்திரக்கடைகளில் கிடைக்கிறது.

இவ்வளவு நல்லவிஷயங்கள் இருந்தாலும் இன்னும் விடியோகான், எல் ஜி, போன்ற பெரிய பிராண்டுகள் இதன் உற்பத்தியை துவக்கவில்லை. பெரும்பாலும் உப்புமா பிராண்டுகளே உள்ளன. எப்படி நம்பி வாங்குவது? இந்த அடுப்புக்களை விற்கும் ஒரு பிரதிநிதியை கேட்டபொழுது "மாசத்துக்கு 70 பீஸ் போவுது சார்" என்றார்.

கேஸ் தொல்லை பெரும் தொல்லையாக இருப்பதால் கண்டிப்பாக ஒன்று வாங்கியாக வேண்டும்.

3 comments:

Tech Shankar said...



It is new info for me.
Thanks

Anonymous said...

அடடா! இது தெரியாமல் நான் ப்ளாக்ல கேஸ் சிலிண்டர் எல்லாம் வாங்கி இருக்கிறேனே...

கானகம் said...

இதுல இப்ப சூடு கூட்ட, குறைக்க வசதியுள்ள், மற்றும் இரண்டு பாத்திரங்கள் வைக்கும் டபுள் மாடல்களும் வந்தாகிவிட்டது.