சென்று கொடு வென்று விடு
சென்ற வருடம் பதிவு எதுவும் எழுதாமல் சாவியானேன், இந்த வருடமாவது இயன்ற வரை எழுத வேண்டும்.
கடந்த வார இறுதியில் கைய்யில் தட்டுபட்ட ஒரு நூலை படிக்கத்துவஙினேன். அதில் வரும் சில அரிய கருத்துக்கள்.
*எந்த வேலையை செய்தாலும் பலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும்.
*நம் செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
*நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.
மேற்படி கர்ம யோக மேட்டர்களை பொதுவாக நாம் கீதைபேருரைகளில் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம்.
கர்ம யோகத்தைப் பற்றியும், நிஷ்காம கர்மத்தையும் அலுவலக் சூழலில் பொருத்தி புனையப்பட்ட ஒரு நிர்வாகவியல் கதை "GO GIVER" புத்தகம்.
பொதுவாக மேலாண்மை நூல்களையும் சுய முன்னேற்ற நூல்களையும் நான் படிப்பதில்லை.
வேண்டா வெறுப்பாக இந்த நூலைப்படிக்க துவங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் கீதை தத்துவங்களையே சொல்வதால் பின்குறிப்பில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தேன். ம்ஹும்ம்.
எப்படியோ மீண்டும் கீதையை புரட்ட வைத்த நூலாசிரியர்களுக்கு நன்றி.
3 comments:
மீண்டும் வலைப்பதிவு எழுதத் தொடங்கியமைக்கு வாழ்த்துகள்.
எப்படி இருக்கீங்க? எப்படி போகுது லைஃப்?
-தீபக்
நன்றி தீபக். ரொம்ப நல்லா இருக்கேன்.
இந்தப் பதிவு குறித்து தீபக்கும், பத்மகிஷோரும் செய்யும் விவாதம் அருமை
:-)
Post a Comment