Saturday, January 23, 2010

IPL பவுன்சர்

ஐபிஎல் ஏலம் பாகிஸ்தானில் ஏகப்பட்ட பீலிங்ஸை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த நாட்டில் பலரும் நம்மூரில் சில பேரும் செம கடுப்பில் இருக்கிறார்கள். வியாபாரத்தையும் தேச பக்தியையும் நம்மாட்களும் பாகிஸ்தானியர்களும் போட்டு குழப்பி வருகிறர்கள்.
இதேபோல டாடா ஜாகுவாரை வங்கினாலும் மிட்டல் ஆர்செலரை வாங்கினாலும் தேவயற்ற தேசபக்தி டேகை ஒட்டிவிடுகிறர்கள்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பல கருத்துக்கள் பேத்தலாக உள்ளது.

1. யாரும் ஏலம் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஏலம் விடாமலேயே இருந்திருக்கலாம். என்று ஒரு வாதம். அப்படி செய்திருந்தால் என்னவாகீருக்கும். இப்போது புலம்புபவர்கள்
'ஐயையோ! ஏலத்தில் பாக் விரர்களை சேர்க்கவில்லயே, நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பை தடுக்கிறார்களே' என்று வேறு விதமான ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

2. என்ன இருந்தாலும் உலக சாம்பியன், யாரையும் ஏலம் எடுக்காதது தப்பு.
இன்றைய கால்பந்து (காற்பந்து ?) உலக சாம்பியன் இத்தாலி, எத்தனை இத்தாலிய வீரர்கள் இப்போது EPLல் விளையாடுகிறர்கள்?

இறுதியாக பாகிஸ்தான் வீரர்களை நெதட்லாந்து, கானடா நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு கானடா மற்றும் நெதர்லாந்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் லலித் மோடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வதற்கு மேலும் சில கருத்துக்கள்(!) இருந்தாலும் சனிக்கிழமை அன்று இவ்வளவு சுறுசுறுப்பு கூடாது என்பதால் அப்பீட்டாகிறேன்.

4 மறுமொழிகள்:

Several tips said...

நல்ல பதிவு

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

venkatesa sivam & sivaramamurthy sivam said...

தங்களுடைய பழைய பதிவில் SONY READER பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.தற்போது தமிழகத்தில் அது எங்கு கிடைக்கிறது?இல்லையேல் கணிணி தவிர்த்து PDF FILE களை படிக்க என்ன வழி?தெரிவிக்கவும்1

பத்மகிஷோர் said...

SONY READER இந்தியாவில் விற்கப்படுவதாக தெரியவில்லை. இந்தியாவில் கிடைக்கும் மற்ற படிப்பான்களைப் பற்றி பத்ரியின் இந்தப் பதிவில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

http://thoughtsintamil.blogspot.com/2010/02/e-reader-devices.html