கதம்பம்
கீழே கருங்கல் தளம்.
மேலே கருங்கற்கள் பலகைகளாக வைக்கப்பட்ட கூரை.
கூரையை தாங்கிப்பிடிக்க கருங்கல் தூண்.
குறுக்குவாகாக கருங்கல் தூலம்
தூணில் செதுக்கப்பட்ட யாளி
யாளியின் அடியில் துதிக்கை கொண்டு ஏசலாடும் யானை.
யாளி மீது பாகன்.
பாகன் கையில் அங்குசம்.
அங்குசம் கண்டு மிரளும் யாழியின் கண்கள்
இவ்வளவும் தேவை ஒரு டியூப் லைட் மாட்ட
*********
ரின் -டைட் விளம்பர யுத்தம் காண சகிக்கவில்லை. இந்த FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே அடேயப்பா.
சர்வ சாதாரணமான சமாச்சாரங்களான சலவை சோப், பவுடர் இவர்கள் நொபல் விஞ்ஞானிகளை கொண்டு தயாரித்தது போன்ற பிம்பத்த நிறுவ முயன்றாலும் அது பல சமயங்களில் படுதோல்வியில் முடிகிறது.
குறிப்பாக பற்பசை மற்றும் டூத் பிரஷ் போன்றவைகளை என்னவோ ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தது போல் காண்பிப்பார்கள்.
*********
பண்டைய தத்துவங்களையும் நவீன சிந்தனைகளையும் கலந்து பேல்பூரியாகத்தரும் நியூ ஏஜ் சாமியார்களைக்கண்டால் எனக்கு அறவே ஆகாது. செஷனுக்கு இவ்வளவு என்று மீட்டர் போட்டு அமவுண்டு கறக்கும் யாரையும் தத்துவ ஞானியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பேர்பட்டவர்களின் பின்னால் சமூகத்தில் நல்ல ஸ்திதியில் உள்ள பலர் அணிவகுப்பது ஆச்சர்யம்.
இடது கன்னத்திற்கு ஒருவர், வலது கன்னத்திற்கு ஒருவர் என்று ஷேவிங் செய்வத்தில் கூட ஸ்பெஷலிஸ்டுகள் வந்துவிட்ட காலமிது. ஆனால் மேற்படி நியு ஏஜ் குருமார்கள் யோக கற்பிப்பது, பத்திரிக்கைக்கு பத்தி எழுதுவது, CEO க்களுக்கு அட்வைஸ் செய்வது , உலக அமைதியை ஏற்படுத்துவது , ஆஸ்பத்திரி நடத்துவது என்று சகலத்தையும் செய்கிறார்கள். பலர் சிலகாலம் ஆட்டத்தில் இருந்து கல்லா கட்டியவுடன் ஃபீல்ட் அவுட் ஆகிறார்கள். ஆட்டத்தில் தொடருபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
6 comments:
கவிதை அருமை கிஷோர், வாழ்த்துகள்.
இன்னமும் நித்யானந்தா தரப்பில் இதெல்லாம் சும்மா கிராஃபிக்ஸில் செய்கிறார்கள் என்று சொல்வதுதான் காமெடியின் கிளைமேக்ஸ்!
வணக்கம்,தங்கள் பதிவுகள் அருமை.கடந்த வருடம் சோனி ரீடர் பற்றி தாங்கள் பதிவிட்டிருந்தீர்கள்.அது தற்போது நம் நகரங்களில் கிடைக்கிறதா?அதன் இந்திய விலை என்ன?அதை பற்றிய விளக்கம் தேவை
dupicate monks
duplicate drugs
duplicate politicians?
கவிதை நன்று!
விளம்பர களேபரங்கள் கொடுமைதான்.
இருந்தும் கருத்தைக் கிள்ளும் சிலதும் இருக்கின்றன.
முன்பு வந்த கோகோ கோலா விளம்பரம் - லைப்ரரியில் படம் வரைந்து பானம் பரிமாறுக்கொள்ளும் ஒரு ஜோடி - கோக்கை பியராக்கியது.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கலக்கல் கவிதை.. நமது ரசனை எவ்வளவு கேடுகெட்டது என்பது டியூப்லைட்டில் தெரிகிறது. நிறைய மலர்களைக் கொண்டு அருமையாக கட்டப்பட்ட கதம்பம்..
Post a Comment