Sunday, August 29, 2010

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை வெளிவந்த்துள்ள அனைத்து புராணப்படங்களிலும் புராணத்தொடர்களிலும் ஒரு அபத்தக்காட்சி மீண்டும் மீண்டும் வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது எதிரெதிர் தரப்பு சண்டையிடும் பொழுது எய்தப்படும் அம்புகள் நேர்கோட்டில் பயணித்து ஒன்றுடன் ஒன்று இம்மி பிசகாமல் மோதும். இதுவரை வந்துள்ளை அனைத்துப்படங்களிலும் அனைத்து அம்புகளும் நேரெதிராக மோதியிருக்கின்றன. முதன் முதலில் யாரோ ஒரு எடிட்டர் செய்த ஒட்டுவேலையை இன்றுவரை கொஞசம் கூட முன்யோசனையில்லாமல் காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். யோசிங்கப்பா.

ஒருமுறை பீட்சா ஹட்டில் சாப்பிட்ட கார்லிக் பிரெட்டின் சுவை என் நண்பர் மற்றும் முன்னாள் பாஸ் ரங்காவிற்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னிடம் சொன்னார். நான் “அது ரொம்ப சிம்பிள் பாஸ், வீட்டிலேயே செஞ்சிடலாம், சாதா ப்ரிடட்டில் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்டை தடவி, நெய்யில் டோஸ்ட் செஞ்சிடுங்க. போதும்” என்றேன். அடுத்த திங்கட்கிழமை என்னிடம் வந்து “ஒங்க ரெசிபி சூப்பர் தல” என்றார். “அப்படியா பாஸ், நான் குன்சாக அடிச்சி விட்டேன் அதுதான் கார்லிக் பிரெட் ரெசிபியா?” என்று கேட்டேன்.

விப்ரோ ஆக்சென்ச்சர் என்று இரு மலைகளிக்கிடயே குறிச்சியாக புதிய அலுவலகம். நல்ல வசதியாக இருந்த்தாலும் ஒரு சங்கடம். ஆபிஸின் பின் வாசலில் ஒரு டீ+ஸ்னாக்ஸ் கடை, மேற்சொன்ன இரு கம்பெனி தம்மர்களும் சதா சர்வ காலமும் எங்கள் ஏரியாவிற்கு அருகே வந்து ஊதித்தள்ளுகிறார்கள். அந்தப்பக்கம் போனாலே புகை மண்டலத்தில் ஊட்டி/சொர்கத்தில் இருப்பது போல ஒரு ஃபீலிங். பாவம் கடைக்காரர். Bloody smokers.

4 comments:

கானகம் said...

சூப்பரு.. கேக்க ஆளிருக்கும்போது என்ன கவலை? ரெசிப்பி என்ன, ஏரோப்ளேன் எப்படி ஓட்டனும்னு கூட சொல்லித்தரலாம்..

:-)

பத்மகிஷோர் said...

கேக்கறவன் கேணயனா இருந்தா, கே.கே நகர் கலிஃபொர்னியால இருக்குனு அடிச்சி விடலாம்.

Unknown said...

ஆனா இன்னும் லேடஸ்டா இரண்டு ராக்கெட் மோதிக்கற மாதிரி எடுக்க ஆரம்பிக்கல. எடுத்த பிறகு ஒரெ டெம்பிலெட் அடுத்த தலைமுறைக்கு.

Unknown said...

இப்படி தான் வேலையை ஊதித்தல்வார்கள் போல..... Highly toxicating fellows... Bloody smokersssss............