Sunday, July 03, 2011

தொட்டியில் வெள்ளிக்கிழங்கு




கடந்த ஆண்டு கடையில் வாங்கிய சர்க்கரை வெள்ளிக்கிழங்கில் ஒன்று மிகச்சிறியதாக இருந்தது, அதல் முளைபோன்ற ஒன்று தென்பட்டது. ஏற்கனவே சில முறை சேப்பங்கிழங்கை தொட்டியில் நட்டு விளைவித்திருந்ததால் , வெள்ளிக்கிழங்கை நட்டால் என்ன என்று ஒரு தொட்டியில் பதித்தேன், சில மாதங்களுக்கு பிறகு தோண்டிய போது ஒரு சிறிய தேங்காய் அளவுக்கு வளர்ந்திருந்தது.

கிழங்கை பிரித்தபின் மேலிருக்கும் இலைகளை மீண்டும் தொட்டியில் நட்டேன். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு எடுத்து பார்த்தபோது, தொட்டி முழுமைமும் கிழங்குகளாக இருந்தது. அறுவடை செய்து சாப்பிட்டாகி விட்டது, அபார ருசி.




நானிருப்பது மூன்றாவது மாடியில் என்றாலும், எதிரே மாடியிருக்கும் பெண்ட்ஹவுஸ் போன்ற அபார்ட்மெண்ட் என்பதால், சிறிய அளவிலான தோட்டம் வைத்துள்ளேன். இதுவரை பூக்கள், கத்திரி வெண்டை, கீரை தவிர, சேப்பங்கிழங்கு, ரும்பு, கேழ்வரகு, பிரண்டை, மஞ்சள் ஆகியவைகளை விளைவித்துள்ளேன்.

3 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... இனிய பாராட்டுகள்.

நானும் இப்படித்தான் எது கிடைச்சாலும் தொட்டியில் நட்டு வச்சுருவேன்.

பெரிய தோட்டம் இருக்குன்னாலும் குளிர் ஊருலே வெள்ளாமை கஷ்டம்:-))))

தொட்டின்னா...கன்ஸர்வேட்டியில் வச்சுக்கலாம்!

சாந்தி மாரியப்பன் said...

தோட்டத்துக்கு பாராட்டுகள்..

எங்கூட்லயும் கரும்பு இப்பத்தான் வளர ஆரம்பிச்சிருக்கு..

கானகம் said...

அண்ணே..சௌக்கியமா? எங்க இருக்காப்ல? போஸ்ட்டுகள் ஒன்னையும்காணோம்..