அடுக்குமாடி குடியிருப்பில் மக்கியுரம், வடிகரைசல் தயாரிப்பு
அடுக்ககத்தில் மக்கியுரம் (compost), வடிகரைசல் தயாரிப்பு
மாடித்தோட்டம் குறித்து சமீப வருடங்களில் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது, இதன் கூடவே நகர்புரங்களில் உருவாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சியும் செய்ய வேண்டும் என
பிரச்சாரமும் நடக்கிறது.
வீட்டில் உருவாகும் காய்கறி கழிவுகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்க நிறைய இடம் தேவை, நகரங்களில் எளிதில் கிடைக்காத சாணம் போன்றவை தேவை, இதனால் துர்நாற்றம் வரும், ஈக்கள் பூச்சிகள் போன்றவை வீட்டிற்க்குள் வரும் என்பது போன்ற பல சங்கடங்களால் குப்பை தரம் பிரிப்பதை தவிர்க்கிறார்கள்.
ஆனால் உண்மையில் , அடுக்குமாடி குடியிருப்பில் கூட எளிமையாக காய்கறி கழிவிகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள். ஒரே அளவுள்ள இரண்டு பிளஸ்டிக் வாளிகள் . (பெயிண்ட் வாளிகள்).

இரண்டு வாளிகளில் ஒன்றின் அடியில் நிறைய சிறு துளைஅகளைப் போட வேண்டும் துளியிடப்படாத வாளியை கீழே வைத்து, துளையிட்ட வாளியை அதன் மேலே வைக்க வெண்டும்.
மேல் வளியில் கொஞ்சம் உலர்ந்த இலைகளை இரண்டு அங்குலம் அளவுக்கு நிரப்ப வேண்டும், பின்னர் அன்றாட காய்கறிக் கழிவுகளை இட்டு வர வெண்டும், இரண்டு அங்குலம் கழிவு சேர்ந்ததும் ஒரு அங்குலம் அளவுக்கு ஈரமண் அல்லது மண்புழு கழிவு போட்டு மூடவேண்டும், பின்னர் மீன்டும் காய்கரிகழிவுகளை போடவேன்டும், இப்படியாக வாளி நிரையும் வரை கழிவுகளை இட்டு நிரப்பலாம்.
சரசரியாக இரண்டு வாரங்களில்(5லி) வாளி நிரம்பும். பூச்சி,துர்நாற்றம் போன்றவை வராமல் தடுக்க மூடியைக்கொண்டு மூடலாம்.
இந்த வாளியில் இருக்கும் கழிவு நொதித்து வரும் சுமார் 6 வாரங்களில் முழுவத்தும் மக்கி நல்ல உரமாகும். மேலும் கீழ் வாளியில் திரவ நிலையில் anaerobic waste வடிகரைசல் தேங்கும் இதனை சேகரித்து வரவேண்டும்.
.
வடிகரைசலை ஸ்ப்ரேயர் கொண்டு நேரடியாகவோ அல்லது நீரில் 1:10 என்ன்னும் விகிதத்தில் தளர்த்தியோ செடிகளுக்கு இடலாம்.
இது போன்ற முன்று செட் வாளிகளைக்கொண்டு மாற்றி மாற்றி உரம் தயாரிக்கலாம். குப்பைகளை குறைக்க உதவலாம்.
No comments:
Post a Comment