Friday, January 16, 2015

துணிக்கடை பைகளில் காய்கறி வளர்ப்பு

துணிக்கடைகளில் நமக்கு கிடைக்கும் கட்டைப்பைகள், பெரிய நைலான் பைகள் போன்றவற்றை என்ன செய்வது என்று தெரியாமல், துக்கிப்போடவும் மனமில்லாமல் அப்படியே சேமித்து வைத்திருப்போம்.

இப்படி  வீணாகச்  சேரும் பைகளை நாம் மாடித்தோட்டதில் காய்கறி வளர்க்க பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டங்களில் மண் தொட்டிகளுக்கு பதிலாக grow bags என்னும் வளர்ப்பு பைகளை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது, இவை  பெரும்பாலும் நைலான் அல்லது polypropelene போன்ற நெகிழி பொருட்களால் செய்யப்பட்டவை, சராசரியாக 50 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

துணிக்கடைகளில் நமக்கு தரப்படும் பைகள் polypropelene ஆல் செய்யப்பட்டவை, நாம் இதனையே  grow bags ஆக பயன்படுத்தலாம்.


1. முதலில் பையை உள்ளிருந்து வெளியாக திருப்பிக்கொள்ள வெண்டும்/
2. அடிப்பகுதி தட்டையாக இல்லாவிடில் அவ்வறு வரும்படி மடித்து தைக்க வேண்டும்.
3. அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள், குச்சி, அல்லது coco peat போன்றவற்றை இட்டு  நிரப்ப வேண்டும்
4. இதற்குமேல், மண் ,மற்றும் மண்புழு கழிவு அல்லது மட்கியுரம் கொண்டு மேல் வரை  நிரப்ப வேண்டும்
5. அனைத்து பக்கங்களிலும், மேலிருந்து கீழ் வரை (2 mm அளவுக்கு)
சிறுதுளைகளையிட வேண்டும்.

துணிக்கடை grow bag தயார் .


நேரடியாக விதைகளையோ, அல்லது நாற்றுகளையோ நடலாம். இந்த வகை பைகளின் மூலம்  மண்மாற்றுவது, கிழங்கு அறுவடை செய்வது போன்றவை மிகவும் சுலபமாக இருக்கிறது.



1 comment:

Vijz TCS said...

Arumaiyana padhivu Kishore