ந்யூமெராலஜி- சில கேள்விகள்
சென்ற ஞாயிறு அன்று விஜய் டி வி யில் "நீயா, நானா" நிகழ்ச்சியில் ந்யூமெராலஜி பற்றி ஒரு விவாதம், ந்யூமெராலஜியை அறிவியல் பூர்வமானது என்று ஒரு கோஷ்டியும் இதனை எதிர்த்து ஒரு கோஷ்டியும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.
ந்யூமெராலஜி (பொதுவாக ஜோதிடமே ) ஒரு டுபாக்கூர் மேட்டர் என்பது என் கருத்து.
என் நெடு நாளைய கேள்வியை ஒருவர் கேட்டார், அது , "ந்யூமெராலஜிப்படி பெயர் மாற்றம் ஏன் எப்போதும் ஆங்கிலத்தில் தான் செய்யா வேண்டும், தமிழ் ந்யூமெராலஜி கிடையாதா" என்பதே.
இதற்கு மழுப்பலாக ஏதேதோ கூறினர் ந்யூமெராலஜியினர்.
எனக்கு ந்யூமெராலஜி பற்றி இன்னொரு கேள்வி உண்டு,
ந்யூமெராலஜி சித்தர்களால் (!) அருளப்பட்டதென்றால் ,கலியுகாதி, ஸாலிவாஹன, விக்கிரம, கொல்லம், ஹிஜிரி, திருவள்ளுவர் , 60 வருட தமிழ் சுழற்சி, என்று பல நாட்காட்டிகள் இருந்தும், ஏன் ஆங்கில நாட்காட்டியையே பயன் படுத்த வேண்டும் ?
இத்தனைக்கும் சில நூற்றண்டுகளுக்கு முன்பு, ஆங்கில நாட்காட்டியிலிருந்து 15 நாட்களை ஒரு போப்பாண்டவர் அப்பீட் செய்துள்ளார் .
அந்த மிஸ்ஸிங் நாட்களின் கோள் நிலைகளை இவர்கள் கணக்கில் சேர்த்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை.
4 comments:
I never know these numerlogy fellows has origins from ancient indian saints...thats surprise bit.
anyway astrology is mere humbug ;)
சிததர்கள் ந்யூமெராலஜியை கண்டுபிடிச்சதா சொல்றதும் ஃப்ராடு தான். இதுல திருவள்ளுவரையும்
ஔவையாரையும் கூட இழுத்துடாங்க.
:) ithuvum namma vaitheesvaran koil nadi josiyam mari fraud-aa?? I laughed at my fren's experience with that nadi josiyam!
they spend hours and hours on finding out some nadi which inturn will be lie!
kulakkodan அவர்களே.
கூகிளாண்டவர் உதவியுடன்
1582ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதிக்கு அடுத்த நாள் 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச்செய்தவர் போப் 13ம் க்ரிகரி Pope Gregor XIII.
பதிவில் 15 நாட்கள் என்று இருப்பது தவறு 10 நாட்கள் என்பதே சரி.
பார்க்க
http://www.geocities.com/calendopaedia/gregory.htm
Post a Comment