உங்கள் அறிவுக்கு சவால்!
பெங்களுரின் பிக் FM எனப்படும் ஒரு அற்புத பண்பலை அலைவரிசையில் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்கிறார்கள்.
உதாரணம் , வீரேந்தர் சேவாக்கின் ஃபர்ஸ்ட் நேம் என்ன,
1 ராகுல் 2 சச்சின் 3 யுவராஜ் 4 வீரேந்தர்
மசால் தோசையின் உள்ளே இருப்பது என்ன
1. வெண்டைக்காய் 2. உருளை 3. கத்திரிக்காய்.
இந்த கேள்விகளை பார்க்கும் போது முன்பு சன் ம்யூஸிக்கில் இரவு 9 மணிக்கு ஹேமா சின்ஹாவின் கேள்விகள் நினைவுக்கு வருகிறது,
ஹேமா சின்ஹா - `0` வை கண்டுபிடித்தது யாரு?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நம்ம நாட்டுக்காரங்களை இப்படி அழைப்பார்கள்
நேயர் - இந்தியர்கள்
ஹேமா சின்ஹா - சரியான பதில்
ஹேமா சின்ஹா - கல்லை தின்னும் பறவை எது?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நெருப்புனு ஆரம்பிச்சு ழினு முடியும்.
நேயர் - நெருப்புக்கோழி
ஹேமா சின்ஹா - சரியான பதில்
ஹேமா சின்ஹாவிற்க்காக ஒருவர் வலைப்பூ வேற ஆரம்பிச்சிருக்கார், அவர் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள். படத்தை அவரிடமிருந்து தான் சுட்டேன்.
2 comments:
wow. hema sinha enga thalavi! avanga question ketta athulla ethavathu arivupuravama irukkom!
chumma thalavai kindal panra vellaiyellam vendom! he he he :)
புனைப்பெயரில் முதல் முதலாக கருத்து சொல்ரீங்க,
கேமா சின்ஹா என்னவோ அறிவுப்பூர்வமாக தான் கேக்கறாங்க ஆனால் போனில் பதில் ஜொள்பவர்கள் தான்..
இப்ப எல்லம் ஹேமா சின்ஹா வர்றதில்ல ....
Post a Comment