Tuesday, November 21, 2006

தெய்வங்களையும் மீறி.

எட்வர்ட் ல்யூஸ் எழுதிய "இன் ஸ்பைட் ஆஃப் காட்ஸ்" படித்து வருகிறேன். இந்திய அரசின் செயல்பாடுகளை பற்றி நகைச்சுவையுடன் விரிவாக எழுதியிருக்கிறார்.

2000 ம் ஆண்டு மத்திய இரும்பு அமைச்சகத்திடம் இருந்து ஒரு அவசர மகஜர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சென்றது , விஷயம் என்ன வென்றால் , துறை அதிகாரிகள் கோப்புகளில் நீலம் அல்லது கருப்பு நிறத்தில் எழுதவேண்டுமா இல்லை பச்சை / சிகப்பு நிறத்தில் எழுத வேண்டுமா என்ற சந்தேகத்தை போக்குமாறு சீர்திருத்தத்துறையிடம் கேட்டிருந்தது.

நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் ஒரு குழு அமைத்து 3 வாரம் பேசி , இந்த விஷயத்தில் பர்சனேல் துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்தனர்.

பர்சனேல் துறை இன்னொரு கமிட்டி அமைத்து 6 வாரம் பேசி, விஷயத்தை பயிற்சித்துறையிடம் கொண்டு சென்றது.

அவர்கள் மேலுமொரு குழு அமைத்து 3 மாதம் பேசி , முதல் முறை எழுதும் போது நீல/கருப்பு பேனாவிலும் திருத்தங்களை செய்யும் போது பச்சை/சிகப்பு பேனாவிலும் எழுதலாம் என்று கருத்து சொன்னது.

எந்தெந்த அதிகாரிகள் பச்சை/சிகப்பு பேனாவில் எழுத "தகுதி" வாய்ந்தவர்கள் என்று கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டு, சில குறிப்பிட்ட "க்ரேட்" அதிகாரிகள் மட்டும் பச்சை/சிகப்பு பேனாவில் திருத்தங்கள் செய்யலாம் என்று வரையறுக்கப்பட்டது.


அன்று முதல் இந்தியாவில் இருந்த வறுமை , பசி, வேலையின்மை எல்லாம் நீங்கி சுபிட்சம் பிறந்தது.

2 comments:

Nirek said...

pachai ink pinnadi ivalo history irukka? nala vellai I escaped from the qualified green ink signer post of govt before!

பத்மகிஷோர் said...

இந்த புத்தகத்தை இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் . நல்லா போகுது. குறிப்பா நம்ம கவர்மெண்ட் ஆபீசர்களைப்பத்தி எழுதியதை படிக்க படிக்க சிரிப்பும் வேதனையும் ஒண்ணா வருது. முழுக்க படிச்சிட்டு விரிவா பதியறேன்