யார் குற்றம்?
டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் கடைகளை மூடி சீல் வைக்க கோர்ட் சொல்லியபின் பலமான போராட்டம் நடக்கிறது. நமக்கு இந்த விஷய்தில் எந்த ஸ்டேக்கும் இல்லாததால் தெளிவாக பார்க்க முயற்சிப்போம்.
டெல்லி மாஸ்டர் ப்ளான் படி சில இடங்களில் வெறும் குடியிருப்புக்கள் தன் இருக்க வேண்டும். கடைகள் வணிக வளாகங்கள் கூடாது. காலப்போக்கில் யாரும் கண்டுகொள்ளாமல் (அல்லது கண்டும் காசு வங்கிக்கொண்டு) விட்டதால் கடைகள் பெருகின. சில கடைகள் 30 ஆண்டுகளாகக் கூட நடக்கின்றன. பலர் விற்பனை வரி, வாட் என்று பல வரிகள் கூட கட்டியுள்ளனர்.
யாரொ ஒருவர் ஒரு பொது நல வழக்கு போட்டதால் , கோர்ட் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முழு பொறுப்பு அரசாங்கமும், அரசு ஊழியர்களும் தான், கடைகளை கட்டும் போதே தடுக்கத்தவறிய அதிகாரிகளையிம், ஊழியர்களயும் கைது செய்து , வழக்குத்தொடரவேண்டும். அவர்களின் வேலையை பறிக்க வேண்டும்.
முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படும் போது கம்மென்று இருந்துவிட்டு கோர்ட் சொன்ன பிறகு இடித்துதள்ளுவது வெறும் பம்மாத்து வேலை. ஒவ்வொரு வார்டிலும் உள்ள அதிகாரிகள் தங்கள் பகுதியில் முறையின்றி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது . அப்படி ஏதாவடு கட்டப்பட்டால் தடுக்க வேண்டும் .
இவ்வாறு அவர்கள் பணியை செய்ய தவறிவர்களை கைது செய்தால் என்ன?
2 comments:
thats looks a like a fair judgement for erred officials! but what we want in the end of the day is no shops in residential area...so current plan of sealing can still go on.
we can look into punishing officials options also
may be one more PIL (public interest litigation ) can wake up the court and government for this action
இப்போதைக்கு கடைகளை மூடுவதுதான் சரி, ஆனால் இப்போதே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வளர்ந்து வரும் மற்ற ஊர்களில் பிரச்சினை வராது.
சென்னையிலும் இப்போது சில தி.நகர் கட்டடங்களை இடிக்க உத்தரவு வந்துள்ளது . இங்கேயும் தவறு செய்த அதிகாரிகளை Direliction of Duty க்காக தண்டிக்க வேண்டும்.
Post a Comment